திமுகவை போல தினகரனும் கழற்றிவிடுகிறார்? நடுத்தெருவில்தான் திருமாவளவனா?

Dinakaran also close door to VCK?

திமுக பொருளாளர் துரைமுருகனின் தாலி-கூட்டணி உறவு பற்றிய பேச்சால், கொந்தளிப்பில் உறுமிக் கொண்டிருக்கிறது சிறுத்தைகள் கூடாரம். இதற்கு ஸ்டாலின் தரப்பில் இருந்து எந்தவித மறுப்பும் வெளியாகாமல் இருப்பதால் விசிக பொறுப்பாளர்களின் ஆதங்கம் தீர்ந்தபாடில்லை.

' ஒரு சீட்டைக் காரணம் காட்டி கடைசி நேரத்தில் கவிழ்க்கவும் திமுகவினர் தயாராக இருப்பார்கள். பாமக இருக்கும் அணியில் நாம் நிச்சயமாக அங்கம் வகிக்கப் போவதில்லை. எனவே தினகரனை ஒரு சாய்ஸாக எடுத்துக் கொள்ளலாம்' என்ற முடிவில் திருமாவளவன் இருக்கிறாராம்.

இதற்காக 6 சீட்டுகள் வரையில் பேசியுள்ளனர். திமுக கூட்டணியில் ஓர் இடத்துக்காகப் போராடுகிறவர்கள், தன்னிடம் 6 சீட்டுகளை எதிர்பார்ப்பதை தினகரன் விரும்பவில்லை. ' திமுகவைவிடவும் நாம் வலுவாக இருக்கிறோம். பாமக, அதிமுக ஆகிய கட்சிகள் இந்தத் தேர்தலில் வெற்றி பெறப் போவதில்லை.

மோடிக்கு எதிரான வாக்குகள் அனைத்தும் அமமுகவுக்குத்தான் வரப் போகிறது. 6 சீட்டுகளைக் கொடுக்கும் அளவுக்கு நாம் இல்லை. 40 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிட்டு செல்வாக்கை நிரூபிப்போம். இந்த வாக்கு சதவீதம், சட்டமன்றத் தேர்தலுக்குப் பயன்படும்' என தினகரன் திட்டம் போடுகிறாராம்.

 

You'r reading திமுகவை போல தினகரனும் கழற்றிவிடுகிறார்? நடுத்தெருவில்தான் திருமாவளவனா? Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - பாமக தொகுதிகளில் யார் வேட்பாளர்கள்? வடக்கு மண்டலத்தை குறிவைத்த தினகரன்!!

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்