இன்னும் திருந்தலை.. அத்தனை கட்சிகளும் இந்திய வீரர்களுக்கு பதில் விடுதலைப் புலிகளுக்கு அஞ்சலி செலுத்தும் அறியாமை

TN All parties tributes to LTTE Instead of Indian Soldiers

காஷ்மீரில் பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாதிகளின் தாக்குதலில் பலியான இந்திய வீரர்களுக்கு அஞ்சலி செலுத்துகிறோம் என்கிற பெயரில் தமிழீழ விடுதலைப் புலிகள் படங்களுக்கு வீரவணக்கம் செலுத்தும் போஸ்டர்களை அத்தனை கட்சிகளுமே வெளியிட்டு வருவது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் தமிழக வீரர்கள் 2 பேர் உட்பட 40 பேர் பலியாகினர். இன்றும் 4 வீரர்கள் மரணித்துள்ளனர்.

தேசத்தையே பெருந்துயரத்தில் ஆழ்த்தியிருக்கிறது இச்சம்பவம். இது தொடர்பாக பல்வேறு விமர்சனங்களும் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் காஷ்மீரில் மரணித்த வீரர்களுக்கு வீரவணக்கம் செலுத்தும் போஸ்டர்கள் தமிழகம் முழுவதும் அனைத்து கட்சியினராலும் ஒட்டப்பட்டுள்ளன. ஆனால் இந்த போஸ்டரில் இடம்பெற்றுள்ளவர்கள் அனைவருமே தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கப் போராளிகள்.

காஷ்மீரில் மரணித்த இந்திய வீரர்களுக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் வித்தியாசம் தெரியாமல் அதிமுக, திமுக, கம்யூனிஸ்ட், பாஜக மட்டுமின்றி புலிகளை தீவிரமாக ஆதரிக்கும் விடுதலை சிறுத்தைகள், நாம் தமிழர் கட்சியினரும் இந்த போஸ்டர்களை ஒட்டியிருப்பது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

You'r reading இன்னும் திருந்தலை.. அத்தனை கட்சிகளும் இந்திய வீரர்களுக்கு பதில் விடுதலைப் புலிகளுக்கு அஞ்சலி செலுத்தும் அறியாமை Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி தந்த பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவு ரத்து- உச்சநீதிமன்றம்

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்