லோக்சபா தேர்தல் அறிக்கை... உங்கள் கருத்துகளையும் வரவேற்கிறது திமுக

DMK seeks opinion from public for Loksabha Poll Manifesto

லோக்சபா தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையில் உங்கள் கருத்துகள், எதிர்பார்ப்புகளையும் அனுப்பி வைக்கலாம் என திமுக வேண்டுகோள் விடுத்துள்ளது.

லோக்சபா தேர்தல் களம் தமிழகத்தில் களைகட்டியுள்ளது. அதிமுக-பாஜக- பாமக கூட்டணி உறுதியாகி உள்ளது. அதேபோல் திமுக-காங்கிரஸ் கூட்டணியும் இறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில் திமுகவின் தேர்தல் அறிக்கையில் இடம்பெற வேண்டிய அம்சங்கள் தொடர்பாக பொதுமக்களின் கருத்தையும் அனுப்புமாறு அக்கட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது.

திமுக தேர்தல் அறிக்கையில் என்ன மாதிரியான விஷயங்கள் இடம்பெறலாம்? என்பது தொடர்பான பொதுமக்களின் கருத்துகளை dmkmanifesto2019@dmk.in என்ற மின் அஞ்சலுக்கு வரும் 28-ந் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும் என வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

You'r reading லோக்சபா தேர்தல் அறிக்கை... உங்கள் கருத்துகளையும் வரவேற்கிறது திமுக Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - மொறு மொறு ஆனியன் ரவா பக்கோடா ரெசிபி

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்