விஜயகாந்த் உடல்நலனில் என்ன பிரச்னை? சுதீஷ் தகவலால் அதிர்ந்த பாஜக

BJP Shocks on Vijayakanth health issue

அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 7 சீட்டுடன் ஒரு ராஜ்யசபா சீட் உறுதி செய்யப்பட்டுவிட்டது. பாஜகவுக்கு 5 இடங்களை ஒதுக்கியிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.

தேமுதிக நம்மோடு வருமா எனக் கடந்த 19ம் தேதி ஒப்பந்தம் கையெழுத்தான அன்று ஆர்வத்துடன் விசாரித்தார் பியூஷ் கோயல். இதற்குப் பதில் கொடுத்த அதிமுக பொறுப்பாளர்கள், அவர்களது எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கிறது எனக் கூறியுள்ளனர்.

இதன்பிறகு விஜயகாந்தை அவருடைய வீட்டுக்கே சென்று சந்தித்தார் பியூஷ். அப்போது சுதீஷிடம் தனியாக பேச்சுவார்த்தை நடத்தினார்.

அப்போது சுதீஷ் பேசிய வார்த்தைகளை பாஜக எதிர்பார்க்கவில்லை. இந்த சந்திப்பில் பேசிய சுதீஷ், என்னுடைய மச்சானுக்கு உடல்நிலை சரியில்லை. அவரால் பிரசாரம் செய்ய வர முடியாது.

தேர்தல் வரையில் அவர் உடல்நிலை எப்படியிருக்கும் என்றும் சொல்ல முடியாது. பாமகவைவிட நாங்கள் குறைந்தவர்கள் அல்ல, கடந்தமுறை உங்களோடு கூட்டு சேர்ந்து 14 இடத்தில் போட்டியிட்டோம்.

இப்போது 2 சீட், 3 சீட் எனக் குறைத்தால் எங்கள் தொண்டர்கள் உற்சாகம் இழந்து போய்விடுவார்கள். எங்களுடைய டிமாண்டுகளை அதிமுக ஏற்றுக் கொண்டால், உங்களோடு வருவதற்குத் தயாராக இருக்கிறோம் எனக் கூறியிருக்கிறார்.

விஜயகாந்த் உடல்நிலை குறித்து, அவநம்பிக்கையான வார்த்தைகளை சுதீஷ் வெளியிட்டதை பாஜக பொறுப்பாளர்கள் எதிர்பார்க்கவில்லையாம்.

எழில் பிரதீபன்

You'r reading விஜயகாந்த் உடல்நலனில் என்ன பிரச்னை? சுதீஷ் தகவலால் அதிர்ந்த பாஜக Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - அன்புமணியின் கோபத்தைக் கிளறிய விஜயகாந்த்! பழைய பகையை மறக்காத பாமக!

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்