வானதிக்கு நோ சீட்! டெல்லியில் கேம்ப் அடித்த சி.பி.ராதாகிருஷ்ணன்

KP Radhakrishnan decides no seat for Vanathi

கோவை மக்களவைத் தொகுதியை மையமாக வைத்து சி.பி.ராதாகிருஷ்ணனும் வானதி சீனிவாசனும் மோதிக் கொண்டிருக்கின்றனர்.

இதில் இரண்டு முறை எம்.பியாக இருந்தவர் என்ற அடிப்படையில் மத்திய கயிறு வாரியத் தலைவர் ராதாகிருஷ்ணனுக்கே ஜாக்பாட் அடிக்க வாய்ப்புள்ளது என்கிறார்கள் கோவை மாவட்டத்தில் காவிக்கட்சி தொண்டர்கள். இந்தமுறை எப்படியும் சீட் வாங்கிவிட வேண்டும் என்பதற்காக டெல்லியிலேயே முகாமிட்டிருக்கிறார் சிபிஆர். இதையறிந்து தன்னுடைய நெருங்கிய நண்பரும் பாதுகாப்புத்துறை அமைச்சருமான நிர்மலா சீதாராமனிடம் அடைக்கலம் ஆகியிருக்கிறார் வானதி.

கடந்த சில ஆண்டுகளில் கோவை மாவட்டத்தில் தான் செய்த நல்ல காரியங்களைப் பட்டியல் போட்டுக் கொடுத்திருக்கிறார் வானதி. சட்டமன்றத் தேர்தலில் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட்டு 30,000 வாக்குகளை வாங்கியிருந்தார் வானதி. அதிமுக தரப்பிலும் தனக்கு எதிர்ப்பு இல்லை என்பதால், உறுதியாக சீட் வேண்டும் எனக் கோரி வருகிறார். இதில் உறுதியாக சிபிஆர் ஜெயிப்பார், தொகுதி வேலைகளை பார்ப்பதற்கு நாளை டெல்லியில் இருந்து வருகிறார் எனப் பேசி வருகின்றனர் அவரது ஆதரவாளர்கள். தனக்கு சீட் கிடைக்கவிடாமல் செய்வதில் தமிழிசையின் பங்கும் அதிகம் எனக் கறுவிக் கொண்டிருக்கிறாராம் தமிழக பாஜக பொதுச் செயலாளர் வானதி சீனிவாசன்.

-அருள் திலீபன்

You'r reading வானதிக்கு நோ சீட்! டெல்லியில் கேம்ப் அடித்த சி.பி.ராதாகிருஷ்ணன் Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - பாகிஸ்தான் கைது செய்துள்ள விமானி அபிநந்தன் யார்? - வெளியானது முழு தகவல்!

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்