இடைவிடாது ட்வீட்... இந்து விரோதிதானே ..... மு.க. ஸ்டாலினை வம்புக்கு இழுக்கும் எச். ராஜா

H Raja condemns MK Stalin

ட்விட்டரில் இன்று பாஜக தேசிய செயலர் எச். ராஜா காலை முதலே ஏழரையை கூட்டிக் கொண்டிருக்கிறார். முதலில் பாஜக ஆதரவாளர் சுமந்த் சி. ராமனுடன் மல்லுக்கட்டிய எச். ராஜா இப்போது ஸ்டாலினை வம்புக்கு இழுத்திருக்கிறார்.

ட்விட்டரை வைத்துக் கொண்டு அரசியல் செய்வதில் கில்லாடியாக இருப்பவர் எச். ராஜா. இன்று காலையில் பாகிஸ்தான் விவகாரத்தை முன்வைத்து சுமந்த் சி. ராமனுடன் பஞ்சாயத்து நடத்தினார் எச். ராஜா.

இதையடுத்து ’தி.மு.க. எந்த மதத்திற்கும் எதிரானது இல்லை’ என அக்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் பேசியதை முன்வைத்து அடுத்த பஞ்சாயத்தை கூட்டியிருக்கிறார் எச். ராஜா. அவர் தமது பதிவில், திருமாவளவன் கூட்டிய கூட்டத்தில் சனாதன இந்து தர்மத்தை வேரறுப்போம் என்று பேசியதற்கு எனன பொருள். இந்து விரோதி தானே என காட்டமாக் கூறியுள்ளார்..

You'r reading இடைவிடாது ட்வீட்... இந்து விரோதிதானே ..... மு.க. ஸ்டாலினை வம்புக்கு இழுக்கும் எச். ராஜா Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - 'யாருக்கெல்லாம் தமிழக அரசின் ௹.2000 சிறப்புத் தொகுப்பு...?' தண்டோரா போட்டு அவசர அவசரமாக மனு வாங்கும் தமிழக அரசு!

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்