எந்தக் கட்சியும் கூட்டணிக்கு வரலை...?தனித்தே போட்டியிட்டு கெத்து காட்ட தயாராகும் தினகரன்!

Loksabha election, dinakarans ammk contesting alone

மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் உள்ள கட்சிகள், பிரதான கட்சிகளான அதிமுக மற்றும் திமுக தலைமையிலான கூட்டணியில் சேரவே ஆர்வம் காட்டுவதால் தினகரனின் அமமுக தனித்துப் போட்டியிடும் சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளது.

மக்களவைத் தேர்தலுக்கு திமுக கூட்டணியிலும், அதிமுக கூட்டணியிலும் எந்தெந்த கட்சிகள் இணையப் போகிறது என்பது கிட்டத்தட்ட முடிவாகிவிட்டது. முக்கிய கட்சிகள் பெரும்பாலானவை இந்த இரு கூட்டணியிலும் அங்கம் வகிக்க தயாராகி விட்டன.

இதனால் கடைசி நேரத்தில் கூட்டணிகளில் குழப்பம் வரும். தனித்து விடப்படும் கட்சிகள் நம்மை நாடி வரும் என பொறுமை காத்த அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் தினகரனுக்கு ஏமாற்றமாகி விட்டது. இதனால் தனித்து விடப் பட்டுள்ளார்.

இருந்தாலும் அனைத்து தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடும் அளவுக்கு எங்களுக்கு வலிமை உள்ளது என கெத்து காட்டி வருகிறார் தினகரன்

 

You'r reading எந்தக் கட்சியும் கூட்டணிக்கு வரலை...?தனித்தே போட்டியிட்டு கெத்து காட்ட தயாராகும் தினகரன்! Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - 'கட்டணம் ரொம்ப கூடுதல்'!தேஜஸ் சொகுசு ரயிலில் கூட்டம் குறைவு!

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்