டெல்லியில் ராணுவ சீருடையில் பிரச்சாரம் செய்த பாஜக எம்பியால் சர்ச்சை

Controversy over Delhi BJP MP, who wears military dress

டெல்லியில் ராணுவ சீருடையில் பாஜக எம்பி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

மக்களவைப் பொதுத் தேர்தலுக்கான பிரச்சாரத்தை பாஜக தீவிரப்படுத்தி வருகிறது. அதன் ஒரு கட்டமாக நேற்று நாடு முழுவதும் இரு சக்கர வாகன பிரச்சாரம் நடந்தது.

டெல்லியில் நடந்த இரு சக்கர வாகனப் பிரச்சாரத்தை டெல்லி மாநில பாஜக தலைவரும் எம்பியுமான மனோஜ் திவாரி தலையேற்று நடத்தினார். அப்போது அவர் ராணுவ சீருடையில் மிடுக்காக பிரச்சாரத்தில் ஈடுபட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

பொதுவாக ராணுவம், போலீஸ் சீருடைகளை மற்றவர்கள் தனிப்பட்ட முறையில் அணிவதோ, பிரச்சாரத்திற்கு பயன்படுத்துவதோ இந்திய தண்டனைச் சட்டம் 171 பிரிவின் கீழ் தண்டனைக்குரிய குற்றமாகும். இதைச் சுட்டிக்காட்டி டெல்லி எம்பி மனோஜ் திவாரிக் கு எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

ஏற்கனவே புல்வாமா தாக்குதல், அதைத் தொடர்ந்து பாகிஸ்தான் தீவிரவாதிகள் மீது நடத்தப்பட்ட விமானத் தாக்குதல் போன்றவற்றை முன்வைத்து பாஜக தேர்தல் ஆதாயம் தேடுகிறது என்ற குற்றச்சாட்டுகளும் எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

You'r reading டெல்லியில் ராணுவ சீருடையில் பிரச்சாரம் செய்த பாஜக எம்பியால் சர்ச்சை Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - கர்நாடக காங்.எம்எல்ஏ திடீர் ராஜினாமா - குமாரசாமி அரசுக்கு மீண்டும் நெருக்கடி

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்