ரஃபேல் ஆவணங்கள் விவகாரம்... ப.சிதம்பரம் செம நக்கல்

P Chidambaram tweets on Rafel Documents

இந்தியாவை உலுக்கி வரும் பிரதமர் மோடி நரேந்திர மோடி தொடர்புடைய ரஃபேல் ஆவணங்கள் குறித்த விவகாரம் பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது.

ரஃபேல் போர் விமானங்கள் கொள்முதல் விவகாரத்தில் மோடிக்கு தொடர்புடையது என்பதை அம்பலப்படுத்தும் ஆவணங்களை இந்து ஆங்கில நாளிதழ் வெளியிட்டு வருகிறது. இது மத்திய அரசுக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது.

இதனிடையே உச்சநீதிமன்றத்தில் ரஃபேல் தொடர்பான ஆவணங்கள் திருட்டு போய்விட்டதாக மத்திய அரசு கூறியது பெரும் விவாதப் பொருளானது. முக்கிய ஆவணங்களையே பாதுகாக்க முடியாத மோடி அரசு நாட்டையா பாதுகாக்கும்? என எதிர்க்கட்சிகள் கிடுக்குப் பிடி போட்டன.

ரஃபேல் ஆவணங்கள் திருடப்படவில்லை; மக்கள் மன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ளன என இந்து என். ராம் விவரித்திருந்தார். தற்போது ரஃபேல் ஆவணங்கள் குறித்து சமூக வலைதளங்களில் விவாதம் நடைபெற்று வருகிறது.

முன்னாள் மத்திய அமைச்சரும் மூத்த காங்கிரஸ் தலைவருமான ப.சிதம்பரம் தமது ட்விட்டரில் வெளியிட்டுள்ள பதிவு:

புதன்கிழமையன்று ‘திருடப்பட்ட’ ஆவணங்கள்

வெள்ளிக்கிழமையன்று ‘அவை நகல் எடுக்கப்பட்ட’ ஆவணங்கள்

அப்ப இடையில் வியாழக்கிழமை அன்று திருடன் திரும்பி வந்து ஆவணங்கள வைத்துவிட்டு சென்றான்?

இப்படி கிண்டடித்துள்ளார் ப.சிதம்பரம்.

You'r reading ரஃபேல் ஆவணங்கள் விவகாரம்... ப.சிதம்பரம் செம நக்கல் Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - ரபேல் போர் விமான ஒப்பந்த ஆவணங்கள் திருட்டா இல்லவே இல்லை என்கிறார் அட்டர்னி ஜெனரல்

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்