தலைமை செயலகத்தை கட்சிப் பணிக்காக பயன்படுத்துவதா.. எடப்பாடி மீது ஆளுநரிடம் திமுக புகார்

DMK complaints against CM Edappadi palanisamy

தமிழக அரசின் தலைமை செயலகத்தை கட்சிப் பணிக்காக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பயன்படுத்துவதாக ஆளுநரிடம் திமுகவின் ஆர்.எஸ். பாரதி புகார் கொடுத்துள்ளார்.

லோக்சபா தேர்தல், சட்டசபை இடைத்தேர்தல் நெருங்குவதால் அதிமுக அதிருப்தியாளர்களை தம் பக்கம் இழுப்பதில் எடப்பாடியார் தீவிரம் காட்டி வருகிறார். இந்த வகையில் அதிமுக பொதுச்செயலர் தேர்வு செய்ய கோரி வழக்கு தொடர்ந்த கே.சி. பழனிசாமி எடப்பாடி அணியில் மீண்டும் நேற்று இணைந்தார்.

தலைமை செயலகத்தில் முதல்வர் எடப்பாடியாரை நேரில் சந்தித்து கே.சி. பழனிசாமி அதிமுகவில் இணைந்தார். இது தொடர்பாக தற்போது ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்திடம் திமுகவின் ஆர்.எஸ். பாரதி புகார் மனு கொடுத்துள்ளார்.

அதில், தலைமைச் செயலகத்தை அதிமுகவின் தலைமை அலுவலகம் போல முதல்வர் எடப்பாடி, துணை முதல்வர் ஓபிஎஸ் பயன்படுத்தி வருகின்றனர். இது அரசியல் சட்டத்துக்கு விரோதமானது.

இந்த விவகாரம் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

You'r reading தலைமை செயலகத்தை கட்சிப் பணிக்காக பயன்படுத்துவதா.. எடப்பாடி மீது ஆளுநரிடம் திமுக புகார் Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - விருப்பமனு அளித்த திமுக வேட்பாளர்களிடம் அண்ணா அறிவாலயத்தில் நேர்காணல்

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்