பிரதமர் மோடி மீண்டும் வாரணாசியில் போட்டி - பாதுகாப்பான மற்றொரு தொகுதியிலும் களம் காண்கிறார்

PM modi again contest in Varanasi

பிரதமர் மோடி மீண்டும் வாரணாசி தொகுதியில் போட்டியிட முடிவு செய்துள்ளார். மற்றொரு பாதுகாப்பான தொகுதியிலும் மோடியை நிறுத்துவதென பாஜக மேலிடம் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த 2014 தேர்தலில் உத்தரப் பிரதேசத்தின் வாரணாசி, குஜராத்தில் உள்ள வதோதரா ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். பின்னர் வதோதரா தொகுதி எம்.பி.பதவியை ராஜினாமா செய்தார்.

தற்போது வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடி மீண்டும் போட்டியிட உள்ளார். டெல்லியில் 2 நாட்கள் நடந்த பாஜக உயர்மட்டக் குழு கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. உ.பி.யில் இம்முறை சமாஜ்வாதி-பகுஜன் சமாஜ் வலுவான கூட்டணி அமைத்துள்ளதாலும், பிரியங்கா கட்சிப் பொறுப்பேற்றதால் காங்கிரசும் தெம்புடன் களமிறங்குவதால் வாரணாசியில் பிரதமர் மோடிக்கு கடும் சவால் காத்திருப்பதாக பாஜக கருதுகிறது.

இதனால் இந்தத் தேர்தலிலும் பிரதமர் மோடியை அவருடைய சொந்த மாநிலமான குஜராத்தில் ஒரு பாதுகாப்பான தொகுதியில் நிறுத்தி வெற்றி பெறச் செய்யவும் பாஜக மேலிடம் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன

 

You'r reading பிரதமர் மோடி மீண்டும் வாரணாசியில் போட்டி - பாதுகாப்பான மற்றொரு தொகுதியிலும் களம் காண்கிறார் Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - கோடையில் தமிழகத்திற்கு காத்திருக்கும் பேராபத்து மழை பொய்த்ததால் கடும் வறட்சி தலைதூக்க வாய்ப்பு

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்