18 தொகுதி இடைத்தேர்தல்கள் ஏப்ரல் 18? ஏப்ரல் 23? தேர்தல் ஆணையத்தால் குழப்பமோ குழப்பம்!

Confusion over TN Assembly By-Election Dates

லோக்சபா தேர்தலுடன் தமிழகத்தில் காலியாக உள்ள 18 சட்டசபை தொகுதிகளுக்குமான இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. ஆனால் லோக்சபா தேர்தல் நடைபெறும் ஏப்ரல் 18-ந் தேதியன்றே சட்டசபை தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடைபெறுமா என்கிற சந்தேகம் எழுந்துள்ளது.

நாடு முழுவதும் 7 கட்டங்களாக லோக்சபா தேர்தல் நடைபெற உள்ளது. தமிழகத்தில் ஏப்ரல் 18-ந் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது.

அதே நாளிலேயே 18 சட்டசபை தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் தேர்தல் ஆணையத்தின் செய்திக் குறிப்பில் ஏப்ரல் 23-ந் தேதி என குறிப்பிடப்பட்டிருந்தது.

இதனால் ஏப்ரல் 18-ல் தேர்தல் நடைபெறுமா? அல்லது ஏப்ரல் 23-ல் தேர்தலா? என்கிற பெரும் குழப்பம் ஏர்பட்டது. இது குறித்து விளக்கம் அளித்துள்ள தேர்தல் ஆணையம், தவறுதலாக அச்சிடப்பட்டுவிட்டது. ஏப்ரல் 18-ந் தேதிதான் இடைத் தேர்தல் நடைபெறும் என கூறியுள்ளது.

You'r reading 18 தொகுதி இடைத்தேர்தல்கள் ஏப்ரல் 18? ஏப்ரல் 23? தேர்தல் ஆணையத்தால் குழப்பமோ குழப்பம்! Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - அந்தமானில் கடலுக்கு அடியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்- சுனாமி எச்சரிக்கை இல்லை!

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்