என்னது லோக்சபா எலெக்zwnjஷனில் போட்டியிடுவதா? நமக்கு ராஜ்யசபாதான் சரிப்படும்...அடம்பிடிக்கும் மன்மோகன்சிங்

Manmohan Singh not ok with Congress offer to contest From Punjab

லோக்சபா தேர்தலில் அமிர்தசரஸ் தொகுதியில் போட்டியிட முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் மறுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

1991-ம் ஆண்டு முதல் அஸ்ஸாம் மாநிலத்தில் இருந்து ராஜ்யசபா எம்.பி.யாக இருந்து வருகிறார் மன்மோகன்சிங். 1999-ம் ஆண்டு தெற்கு டெல்லி தொகுதியில் போட்டியிட்டு தோல்வியைத் தழுவினார் மன்மோகன்சிங்.

தற்போது ராஜ்யசபா எம்.பியாக இருக்கும் மன்மோகன்சிங் பதவிக் காலம் வரும் ஜூன் 14-ந் தேதியுடன் முடிவடைகிறது. இதனால் அவரை பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் லோக்சபா தொகுதியில் போட்டியிட அம்மாநில காங்கிரசார் வலியுறுத்துகின்றனர்.

ஆனால் இதுவரை மன்மோகன்சிங் சாதகமான பதில் எதனையும் தெரிவிக்கவில்லை. லோக்சபா தேர்தலில் போட்டியிட்டு தோல்வியைத் தழுவ நேரிட்டால் அவமானம் என மன்மோகன்சிங் கருதுவதாக கூறப்படுகிறது.

அமிர்தசரஸ் தொகுதியில் 2014-ம் ஆண்டு நிதி அமைச்சர் அருண் ஜேட்லி போட்டியிட்டு தோல்வியைத் தழுவினார் என்பது குறிப்பிடத்தக்கது.

You'r reading என்னது லோக்சபா எலெக்zwnjஷனில் போட்டியிடுவதா? நமக்கு ராஜ்யசபாதான் சரிப்படும்...அடம்பிடிக்கும் மன்மோகன்சிங் Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - விருப்பமனு அளித்தவர்களுக்கு 13ல் நேர்காணல் அடடே, தேமுதிகவுக்கும் சுறுசுறுப்பு வந்துடுச்சு!

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்