மோடி இரும்பு மனிதர் அல்ல... அடிக்கல் நாட்டும் பிரதமர் அவ்வளவுதான்... மு.க.ஸ்டாலின் பொளேர்

MK Stalin dares PM Modi

நாட்டின் பிரதமர் மோடி இரும்பு மனிதர் அல்ல.. அவர் அடிக்கல் நாட்டும் பிரதமர் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

நாகர்கோவில் பிரசாரக் கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:

நாட்டின் பிரதமராக இன்னும் சில வாரங்களில் ராகுல் காந்தி பதவியேற்பார் என உறுதியாகச் சொல்கிறேன். அதனால்தான் ராகுல் காந்தியே பிரதமர் வேட்பாளர் என துணிச்சலோடு அறிவித்தேன்.

நரேந்திர மோடி நாட்டின் பிரதமர் அல்ல. இரும்பு மனிதரும் அல்ல. அவர் அடிக்கல் நாட்டும் பிரதமர். அதாவது 30 நாட்களில் 155 புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி இருக்கிறார்.

திடீரென பிரதமர் மோடிக்கு, காமராஜர் குறித்து நினைவு வந்திருக்கிறது. காமராஜர் படத்துடன் ஓட்டு கேட்கிறது பாஜக.. உங்களுக்குவாக்கு கேட்க உங்களது கட்சித் தலைவர்களின் படங்கள் கூட கிடைக்கவில்லையா?

தமிழகத்திலே பினாமி ஆட்சியை மத்திய பாஜக அரசு நடத்திவருகிறது. லஞ்சம், ஊழலுடன் பெண்களுக்கு பாதுகாப்பற்ற ஒரு அரசு இங்கே இருக்கிறது.

தமிழகம், புதுவையில் 40 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம். அந்த வெற்றியுடன் ராகுலை டெல்லியில் சந்திப்பேன்.

இவ்வாறு ஸ்டாலின் கூறினார்.

You'r reading மோடி இரும்பு மனிதர் அல்ல... அடிக்கல் நாட்டும் பிரதமர் அவ்வளவுதான்... மு.க.ஸ்டாலின் பொளேர் Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - பொய்யைத் தவிர மோடி எதையும் பேசமாட்டார்: நாகர்கோவிலில் ராகுல் காந்தி ‘அட்டாக்’

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்