8 தொகுதிகளில் திமுகவுடன் அதிமுக நேரடி மோதல் பாஜகவை ஒரு தொகுதியில் மட்டும் எதிர்க்கிறது திமுக

Dmk admk direct contest in 8 seats

மக்களவைத் தேர்தலில் கூட்டணிகளுக்கு தலைமை வகிக்கும் திமுகவும், அதிமுகவும் தலா 20 தொகுதிகளில் போட்டியிட்டாலும் இரு கட்சிகளும் 8 தொகுதிகளில் மட்டுமே நேரடியாக மோதி பலப்பரீட்சை நடத்த உள்ளன.

திமுக, அதிமுக கூட்டணியிலும் தொகுதிகள் ஒதுக்கீடு முடிவடைந்து விட்டது. இதனால் 39 தொகுதிகளிலும் எந்தெந்தக் கட்சிகளிடையே போட்டி என்பது தெளிவாகிவிட்டது.கூட்டணிக் கட்சிகளுக்கு இரு கட்சிகளுமே 19 தொகுதிகளை ஒதுக்தி விட்டு, திமுக 20 தொகுதிகளிலும், அதிமுக 20 தொகுதிகளிலும் களம் காண்கின்றன.

இதில் தென் சென்னை, காஞ்சிபுரம், திருநெல்வேலி, திருவண்ணாமலை, சேலம், நீலகிரி, பொள்ளாச்சி, மயிலாடுதுறை ஆகிய தொகுதிகளில் மட்டுமே அதிமுக - திமுக இடையே நேரடிப் போட்டியில் ஈடுபட்டு பலப்பரீட்சை நடத்த உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

அதிமுக கூட்டணியில் பாஜக கன்னியாகுமரி, தூத்துக்குடி, சிவகங்கை, ராமநாதபுரம், கோவை தொகுதிகளில் போட்டியிடுகிறது. இதில் தூத்துக்குடியில் மட்டும் திமுகவுடன் நேரடியாக மோதுகிறது. கன்னியாகுமரி, சிவகங்கையில் காங்கிரசுடனும், ராமநாதபுரத்தில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக்கையும் , கோவையில் மார்க்சிஸ்ட் கட்சியையும் எதிர்கொள்கிறது பாஜக .

You'r reading 8 தொகுதிகளில் திமுகவுடன் அதிமுக நேரடி மோதல் பாஜகவை ஒரு தொகுதியில் மட்டும் எதிர்க்கிறது திமுக Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - பாமக குறிவைத்து பழிவாங்க துடிக்கும் திமுக..? 7 தொகுதிகளிலும் உதயசூரியன் சின்னம் தான்

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்