குப்பை வண்டி, இளநீர் கடை, தூய்மை பணி...திண்டுக்கல்லைக்nbspகலக்கும்nbspமன்சூர்nbspஅலிகான்

mansoor ali khan election campaign

திண்டுக்கல் தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் நடிகர் மன்சூர் அலிகான், குப்பை வண்டி ஒட்டியும், வீதிகளைத் தூய்மை செய்தும் பொது மக்களிடம் வாக்கு சேகரித்தார்.

திண்டுக்கல் மக்களவைத் தொகுதியில் திமுக திமுக வேட்பாளராக வேலுச்சாமி, அதிமுக கூட்டணி பாமக வேட்பாளர் ஜோதி முத்து, அமமுக வேட்பாளர் ஜோதி முருகன் ஆகியோர் போட்டியிடுகின்றனர். இதே தொகுதியில், நாம் தமிழர் கட்சி சார்பில் நடிகர் மன்சூர் அலிகான் போட்டியிடுகிறார்.

தேர்தலில், தன்னை எதிர்த்துப் போட்டியிடும் வேட்பாளர்களைத் தோற்கடிக்கக் களத்தில் இறங்கி பொதுமக்களிடம் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். சாமானிய மக்களின் ஆதரவைப் பெற, குப்பை வண்டியை ஓட்டிச் சென்று வாக்கு கேட்பது, தெருவைத் தூய்மை செய்வது, காய்கறிகள் விற்பது எனப் பம்பரமாகச் சுழன்று வருகிறார்.

இவ்வாறு, வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ள மன்சூர் அலிகானின் செயல்கள் திண்டுக்கல்  மக்களை வெகுவாக கவர்ந்து வருகிறது என்றே கூறலாம்.

You'r reading குப்பை வண்டி, இளநீர் கடை, தூய்மை பணி...திண்டுக்கல்லைக்nbspகலக்கும்nbspமன்சூர்nbspஅலிகான் Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - அஜித்தின் நேர்கொண்ட பார்வை ரிலீஸ் தேதி அறிவிப்பு!

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்