வாக்காளர்களின் சந்தை மதிப்பு என்ன போஸ்டர் போட்டு அசத்தல்!

New post for voters strategy

மக்களவையில் 543 உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கான சுதந்திர இந்தியாவின் 17-வது மக்களவைத் தேர்தல் தமிழகத்தில் நாளை மறு நாள் நடைபெற இருக்கிறது. நீண்ட காலங்களுக்குப் பிறகு தனிப்பெரும்பான்மையுடன் பாஜக மோடியின் தலைமையில் ஆட்சி அமைத்தது அத்தனை எதிர்க்கட்சிகளையும் இந்த ஐந்து ஆண்டுகளில் பாடாய் படுத்தி விட்ட நிலையில், எப்படியும் பாஜகவை வீழ்த்துவோம் என திமுக, காங்கிரஸ் போன்ற எதிர்க்கட்சிகளும், மீண்டும் மோடியை பிரதமராக்குவோம் என அதிமுக, பாமக போன்ற கட்சிகளும் களமிரங்கியுள்ளதாக தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது.

இதில் 22 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் வருவதால் இந்த 22 தொகுதி மக்களும் படு குஷியாகி இருக்கிறார்கள். நாடாளுமன்ற தேர்தலுக்கும், சட்டமன்ற தேர்தலுக்கும் தனித்தனி விட்டமின் ‘ப’ வை பெற்றுக் கொள்ளும் மக்கள் இப்போதெல்லாம் கூச்சப்படுதில்லை. தெளிவாக வருகிறவர்களிடம் பேரம் பேசி வசூலித்து விடுகிறார்கள்.

வாக்குக்கு பணம் என்பது அச்சுறுத்தும் அளவுக்கு வளர்ந்து விட்ட நிலையில், வாக்காளர்களுக்கு பேசப்படும் பேரத்தை சந்தையில் விற்கப்படும் விலங்குகளோடு ஒப்பிட்டு அடிக்கப்பட்டுள்ள இந்த போஸ்டர் பட்டையை கிளப்புகிறது.

You'r reading வாக்காளர்களின் சந்தை மதிப்பு என்ன போஸ்டர் போட்டு அசத்தல்! Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - 'எங்கள் சின்னம் மட்டுமே தெளிவாக இல்லை' – சீமான் குற்றச்சாட்டு

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்