குடும்பத்துடன் வந்து வாக்களித்த நடிகர் சூர்யா!

Actor Surya and his family cast their votes

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் காலை 7 மணி முதல் பரபரப்பாக வாக்குப்பதிவு நடந்து வருகிறது. அரசியல் தலைவர், நடிகர்கள் மற்றும் பிரபலங்கள் என அனைவரும் காலை முதலே உற்சாகமாக தங்களது வாக்கினை செலுத்தி வருகின்றனர்.

பல இடங்களில் மின்னணு வாக்கு இயந்திரம் கோளாறு, பவர்கட் உள்ளிட்ட பிரச்னைகள் வாக்களிக்க வந்தவர்களை நோகடிக்கின்றன. ஆனபோதும், உற்சாகமாக நீண்ட வரிசையில் தங்களது ஜனநாயக கடமையை ஆற்ற மக்கள் ஆர்வத்துடன் காத்து நிற்கின்றனர்.

நடிகர் சிவகுமார் திநகரில் உள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கினை பதிவு செய்தார்.

அவருடன் அவரது மகன்கள் மற்றும் நடிகர்களான சூர்யா, கார்த்தி மற்றும் சூர்யாவின் மனைவியும் நடிகையுமான ஜோதிகா தங்களது வாக்கினை பதிவு செய்தனர்.

நடிகர் விஜய் ஆண்டனி தனது வாக்கினை பதிவு செய்துவிட்டு, அனைவரும் வாக்களிக்க வேண்டும் என தனது மை விரலை காட்டி போஸ் கொடுத்தார்.

You'r reading குடும்பத்துடன் வந்து வாக்களித்த நடிகர் சூர்யா! Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - கள்ளகாதலை விட மறுத்த மனைவியை போட்டு தள்ளிய கணவர்

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்