கரண்ட் இல்லைனா டார்ச்லைட்ட வச்சா ஓட்டுப் போட முடியும்.. ஒருவழியாக ஓட்டுப் போட்டார் கமல்ஹாசன்!

Power came kamal haasan cast his vote

தமிழகத்தில் 38 மக்களவை மற்றும் 18 சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. பொதுமக்களும், பிரபலங்களும் காலை முதலே தங்கள் ஜனநாயகக் கடமையை ஆர்வத்துடன் நிறைவேற்றி வருகின்றனர்.

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் வாக்களிக்க இருந்த தேனாம்பேட்டை திருவள்ளுவர் சாலை வாக்குச்சாவடியில் மின்வெட்டு ஏற்பட்டதால் தாமதம் ஏற்பட்டது .இதனால் கமல் நீண்ட நேரமாக வரிசையில் காத்திருந்தார்.

நீண்ட நேரம் மின்சாரம் வராததால், அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில், தற்போது அங்கு மின்சாரம் வந்ததால், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனும் நடிகை ஸ்ருதிஹாசனும் தங்களது வாக்கினை ஒருவழியாக பதிவு செய்தனர்.

நடிகர் பிரபு அவரது மனைவி மற்றும் மகன் விக்ரம் பிரபு தங்களது வாக்கினை பதிவு செய்தனர்.

தேர்தல் அதிகாரிகளின் அலட்சியப் போக்கால், தமிழ்நாட்டின் பல பகுதிகளில் மின்னணு வாக்கு இயந்திரங்கள் பழுதாகி உள்ளன.

You'r reading கரண்ட் இல்லைனா டார்ச்லைட்ட வச்சா ஓட்டுப் போட முடியும்.. ஒருவழியாக ஓட்டுப் போட்டார் கமல்ஹாசன்! Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - கமல் வாக்களிக்க இருந்த பூத்தில் கரண்ட் கட் - ஓபிஎஸ் வாக்குச்சாவடியில் ஓட்டு மிஷினில் கோளாறு

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்