மதுரை வாக்கு எண்ணும் மையத்தில் பெண் அதிகாரி அத்துமீறல் ..! உயர்மட்ட விசாரணை கோரி வழக்கு

Lady officer enters Madurai vote counting centre issue, Marxist candidate appeals HC to high level probe

மதுரை மக்களவைத் தொகுதி வாக்கு எண்ணிக்கை மையத்தில் பெண் தாசில்தார் அத்துமீறி நுழைந்த விவகாரத்தில் உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிடக் கோரி மார்க்சிஸ்ட் கட்சி வேட்பாளர் சு.வெங்கடேசன் சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையீடு செய்துள்ளார். இதன் மீதான விசாரணை நாளை நடைபெறும் என நீதிபதிகள் அறிவித்துள்ளனர்.

மதுரை மக்களவைத் தொகுதியில் பதிவான வாக்குகள் அடங்கிய மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மதுரை மருத்துவக் கல்லூரி மையத்தில் வைக்கப் பட்டுள்ளது. இந்த மையத்திற்குள் அத்துமீறி நுழைந்த சம்பூர்ணம் என்ற பெண் தாசில்தார், சில ஆவணங்களை நகல் எடுத்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. மார்க்சிஸ்ட் மற்றும் அமமுக வேட்பாளர்கள் போராட்டம் நடத்தியதால் பெண் அதிகாரி மற்றும் 3 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

ஆனால் இந்த விவகாரத்தில் தேர்தல் ஆணையம் எடுத்த நடவடிக்கைகள் திருப்தி அளிக்கவில்லை. உயர் மட்ட விசாரணை நடத்தி உண்மையை வெளிக்கொணர உத்தரவிடக் கோரி மார்க்சிஸ்ட் கட்சி வேட்பாளர் சு.வெங்கடேசன் சென்னை உயர் நீதி மன்றத்தில் முறையீடு செய்தார். இந்த முறையீட்டு மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட உயர் நீதிமன்றம், வழக்கை நாளை விசாரிப்பதாக அறிவித்துள்ளது.

வாக்கு எண்ணிக்கை மையத்தில் அத்துமீறிவாக்கு எண்ணிக்கை மையத்தில் அத்துமீறி நுழைந்த பெண் தாசில்தார்...! மதுரையில் நள்ளிரவு பரபரப்பு

You'r reading மதுரை வாக்கு எண்ணும் மையத்தில் பெண் அதிகாரி அத்துமீறல் ..! உயர்மட்ட விசாரணை கோரி வழக்கு Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - பெண் மார்புக்குள் இப்படியொரு அதிசயமா? உலகளவில் வைரலாகும் புகைப்படம்!

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்