சென்னைக்கு வரும் சின்னம்மா! கலக்கத்தில் இ.பி.எஸ்., ஓ.பி.எஸ். டீம்

Sasikala is coming to Chennai,

அன்னிய செலாவாணி மோசடி வழக்கு தொடர்பாக எழும்பூர் நீதிமன்றத்தில் பதில் அளிக்க பெங்களூர் சிறையில் இருக்கும் சசிகலா வரும் 13ம் தேதி சென்னை வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

வி.கே.சசிகலா, அவரது உறவினர் பாஸ்கரன் மற்றும் ஜெ.ஜெ டிவி நிர்வாகம் மீது அன்னிய செலாவணி மோசடி தொடர்பாக 5 வழக்கு விசாரணை சென்னை எழும்பூர் முதலாவது பொருளாதார குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

இந்த வழக்கில் சாட்சிகள் அளித்த சாட்சியத்தின் அடிப்படையில் நீதிபதி குற்றம்சாட்டபட்டவர்களிடம் கேள்விகளை கேட்டு பதிலை பதிவு செய்ய உள்ளார். இந்த நடைமுறைக்காக சசிகலாவை வரும் 13ஆம் தேதி ஆஜர்ப்படுத்த பெங்களூர் சிறை நிர்வாகத்திற்கு சென்னை எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

எழும்பூர் நீதிமன்றத்தின் உத்தரவை ஏற்று பெங்களூரு சிறை நிர்வாகம் சசிகலாவை வரும் 13ம் தேதி சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சசிகலாவை பெங்களூர் சிறை நிர்வாகம் கட்டாயம் எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும் என்று எதிர்பார்க்கிறது. அவர் வருகையால் கட்சிக்குள் எதுவும் எதிர்மறையான நிகழ்வுகள் நடக்குமோ என்ற கலக்கத்தில் இ.பி.எஸ்., ஓ.பி.எஸ். டீமும் உள்ளதாக தகவல்.

பா.ஜ.க.வுக்கு மாறப் போகிறனோ? ஓ.பன்னீர்செல்வம் கதறுவது ஏன்?

You'r reading சென்னைக்கு வரும் சின்னம்மா! கலக்கத்தில் இ.பி.எஸ்., ஓ.பி.எஸ். டீம் Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - விமான நிலையங்களில் தொடர்ந்து சிக்கும் கடத்தல் தங்கம்: திணறும் சுங்க இலாகா அதிகாரிகள்

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்