தினகரன் நாளிதழ் மீது தமிழக அரசு அவதூறு வழக்கு..! காரணம் என்ன..?

Tn govt file Defamation case about daily newspaper

தினகரன் நாளிதழ் மீது தமிழக அரசு சார்பில் அவதூறு வழக்கு தொடரப்பட உள்ளது.

இது தொடர்பாக வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கடந்த 6-ம் தேதி வெளியான தினகரன் நாளிதழின் முகப்பு பக்கத்தில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை பற்றி உண்மைக்கு புறம்பான செய்தி வெளியிடப்பட்டதாக காரணம் கூறப்பட்டுள்ளது. மும்மொழி கொள்கையை முதல்வர் ஆதரிக்காத போது அதை ஆதரிப்பதாக செய்தி வெளியிடப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், முதல்வரின் பெயருக்கு தினகரன் நாளிதழ் குந்தகம் விளைவித்ததாகவும், அவரது புகழுக்கு களங்கம் கறிபித்ததாகவும் செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது. எனவே, தினகரன் நாளிதழ் ஆசிரியர், வெளியீட்டாளர், பதிப்பாளர் உள்ளிட்டோர் மீது சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு தொடர தமிழக அரசு தீர்மானித்துள்ளது.

 

-தமிழ் 

You'r reading தினகரன் நாளிதழ் மீது தமிழக அரசு அவதூறு வழக்கு..! காரணம் என்ன..? Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - அனைவரும் விரும்பும் மாம்பழ பாசுந்தி ரெசிபி

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்