ஸ்டாலின் சிங்கப்பூருக்கு திடீர் பயணம்

m.k.stalin gone to Singapore on vacation tour

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் திடீர் பயணமாக சிங்கப்பூருக்கு சென்றுள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவரும், தி.மு.க. தலைவருமான ஸ்டாலின், கோடை காலத்தில் ஒரு வாரம், பத்து நாள் வெளிநாடு சுற்றுப்பயணம் மேற்கொள்வதுண்டு. தற்போது நாடாளுமன்றத் தேர்தல் முடிந்ததைத் தொடர்ந்து, ஸ்டாலின் ஐந்து நாள் பயணமாக சிங்கப்பூருக்கு சென்றுள்ளார். அவருடன் மனைவி துர்கா ஸ்டாலினும், உதவியாளர் ராஜா சங்கரும் சென்றுள்ளார்கள்.

சட்டசபை எந்த நேரத்திலும் கூடும் வாய்ப்பு உள்ளதாலும், உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பு வெளியாக வாய்ப்பு உள்ளதாலும் ஸ்டாலின் சில நாட்கள் மட்டுமே அங்கு இருப்பார் என்று தெரிகிறது.

அனேகமாக, சிங்கப்பூரில் ஐந்து நாட்கள் தங்கி விட்டு, வரும் 19ம் தேதி ஸ்டாலின் திரும்பி வருவார் என்று அவருக்கு நெருக்கமானவர்கள் தெரிவித்தனர்.

தம்பிகளுக்கு சீமான் போட்ட உத்தரவு..? சுற்றி சுழலும் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள்..!

You'r reading ஸ்டாலின் சிங்கப்பூருக்கு திடீர் பயணம் Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - எடப்பாடியின் தந்திரம் பலிக்குமா..? தேர்தல் சாணக்கிய மன்னன் பிரசாந்த் கிஷோருடன் அதிமுக ஒப்பந்தம்

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்