ஊழலில் நீந்தும் உள்ளாட்சித்துறை அமைச்சர் - எஸ்.பி.வேலுமணி மீது மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு

Mk Stalin slams minister SP velumani

 தமிழகத்தில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட தமிழக அரசின் மெத்தன செயல்பாடே காரணம் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றஞ்சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ள விவரம் பின்வருமாறு; பள்ளிகள் தண்ணீர் பஞ்சம், பல உணவகங்கள் மூடப்படுகிறது. அதுமட்டுமல்ல ஐ.டி கம்பெனிகள் தங்களது ஊழியர்களை இல்லத்தில் இருந்தே பணியாற்ற உத்தரவிட்டுள்ள அவல நிலைமை சென்னைக்கு வந்தது ஏன்? இதற்கெல்லாம் “ஊழலில்” நீந்தும் உள்ளாட்சித்துறை அமைச்சரிடம் உரிய பதில் இல்லை எனத் தெரிவித்துள்ளார்.

மேலும், நான் ஏற்கனவே விடுத்த வேண்டுகோளை ஏற்று கழகத்தினர் ஆங்காங்கே குடிநீர் விநியோகம் செய்வதாக வரும் தகவல் ஆறுதலாக இருந்தாலும், பொதுமக்களுக்கு குடிநீர் வழங்கும் பணியை தங்களால் மேலும் இயன்றவரை முனைப்புடன் நிறைவேற்றிட வேண்டும் என கழக நிர்வாகிகள், சட்டமன்ற உறுப்பினர்களை கேட்டு கொள்கிறேன்.

மேற்கண்டவாறு மு.க.ஸ்டாலின் தனது பதிவை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.

காவிரி மேலாண்மை ஆணையம் ஜூன் 24ல் மீண்டும் கூடுகிறது

You'r reading ஊழலில் நீந்தும் உள்ளாட்சித்துறை அமைச்சர் - எஸ்.பி.வேலுமணி மீது மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - 'குடிமராமத்துப்பணி பற்றி வெள்ளை அறிக்கை தேவை'- டி.டி.வி.தினகரன் அறிக்கை

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்