காங்கிரஸை தூக்கி சுமக்க முடியாது..! கொளுத்திப்போட்ட கே.என்.நேரு

K.N.Nehru speech about DMK Cong alliance

 மக்களவைத் தேர்தலில் திமுக காங்கிரஸ் கூட்டணி தமிழகத்தில் அமோக வெற்றி பெற்றுள்ள நிலையில் அந்தக் கூட்டணிக்கான எண்ட் கார்டு விரைவில் வந்துவிடும் போல் தெரிகிறது. காரணம் தமிழகத்தில் வலுவில்லாமல் இருக்கும் காங்கிரஸ் கட்சியை தோளில் தூக்கி சுமக்க திமுக நிர்வாகிகளும், தொண்டர்களும் தயாராக இல்லை.

அதன் வெளிப்பாடே, காங்கிரஸ் கட்சியை கூட்டணியில் இருந்து கழற்றி விட வேண்டும் என முன்னாள் அமைச்சர் கே.என். நேரு பேசியிருக்கிறார். தண்ணீர் தட்டுப்பாட்டை போக்கக்கோரி திருச்சியில் நடைபெற்ற திமுக பேசிய கே.என்.நேரு, காங்கிரஸ் கட்சியை தூக்கி சுமக்க வேண்டாம் என்றும், உள்ளாட்சித் தேர்தலில் திமுக தனித்து போட்டியிட வேண்டும் எனவும் கூறியுள்ளார்.

மேலும், திருச்சியில் மட்டுமாவது திமுக தனித்து போட்டியிட தாம் மு.க.ஸ்டாலினை வலியுறுத்துவேன் எனத் தெரிவித்துள்ளார். இவரது பேச்சு தமிழக அரசியலில் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. தலைமை நினைப்பதை தான் கே.என்.நேரு பேசியுள்ளார் என்றும், இந்த்கக் கருத்து அவரது சொந்தக்கருத்தாக இருக்க முடியாது எனவும் கூறுகின்றனர் அரசியல் நோக்கர்கள். மேலும், உள்ளாட்சித் தேர்தலில் கூட்டணிக் கட்சிகள் அதிக இடங்களை கேட்டு நெருக்கடி தருவதை தடுக்கவே திமுக முன்னணினர் இப்படி பேசிவருவதாகவும் கூறுகின்றனர்.

-தமிழ் 

உ.பி. சட்டப்பேரவை இடைத்தேர்தலில் தனித்துப் போட்டி - மாயாவதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு

You'r reading காங்கிரஸை தூக்கி சுமக்க முடியாது..! கொளுத்திப்போட்ட கே.என்.நேரு Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - பீகாரில் 128 குழந்தைகளை கொன்ற மூளைக்காய்ச்சல்

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்