முகிலன் மீது பொய் வழக்கு போலீஸ் மீது மனைவி குற்றச்சாட்டு

mukilan was arrested in false case : wife accussed police

சமூக செயற்பாட்டாளர் முகிலன் காணாமல் போய் 141 நாட்களுக்குப் பிறகு திருப்பதியில் கண்டுபிடிக்கப்பட்டார். அவரை சென்னைக்கு கொண்டு வந்த போலீசார், பாலியல் வழக்கில் கைது செய்துள்ளனர். இந்நிலையில், முகிலனைப் பார்ப்பதற்காக அவரது மனைவி பூங்கொடி நேற்று மாலையில் சி.பி.சி.ஐ.டி. தலைமை அலுவலகத்திற்கு வந்தார். அங்கு அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

முகிலன் எங்கிருந்தார் என்று அவர் மனைவி நடத்தும் போராட்டங்களை முடக்குவதற்காகவே அவர் மீது போலீசார் பொய் வழக்கு போட்டுள்ளனர். அவரை வேண்டுமென்றே அவமானப்படுத்துகின்றனர். அவரை கடத்திச் சென்று சிறை வைத்து அடித்து துன்புறுத்தியுள்ளனர்.

அவரது கண்களை கட்டி, யாரென்று அடையாளம் காட்டாத மர்ம நபர்கள் கடத்திச் சென்றிருப்பார்கள். தற்போது அவரது உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளது. அவர் நல்ல மனநிலையில் இல்லை. எனது கணவரின் உயிருக்கு ஆபத்து உள்ளது. அவருக்கு எதுவும் நடக்கலாம். தமிழக அரசின் மீது நம்பிக்கை இல்லை.

உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ள அவரை உடனடியாக மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இன்னுமா பிரிட்டிஷ் சர்க்கார் நடக்குது? 82 வயது முதியவர் கொந்தளிப்பு

You'r reading முகிலன் மீது பொய் வழக்கு போலீஸ் மீது மனைவி குற்றச்சாட்டு Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - உயர்சாதியினருக்கு 10% ஒதுக்கீடு; இன்று மாலை சர்வகட்சி கூட்டம்

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்