ராகுல் காந்திக்கு காஷ்மீர் ஆளுநர் அழைப்பு விடுத்தது வெற்று பிரச்சாரம் ப.சிதம்பரம் சாடல்

JK governors invitation to Rahul Gandhi was never sincere invitation, p.chidambaram says in twitter:

காஷ்மீருக்கு வாருங்கள், தாராளமாக நிலவரத்தை சுற்றிப் பாருங்கள் என்று ராகுல் காந்திக்கு அம்மாநில ஆளுநர் சத்யபால் மாலிக் அழைப்பு விடுத்திருப்பதில் உண்மையில்லை என்றும், வெறும் பிரச்சார யுக்தியாகவே கையாள்கிறார் என்றும் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் டுவிட்டரில் சாடிள்ளார்.

காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து ரத்து, இரு யூனியன் பிரதேசங்களாக பிரித்தது போன்ற நடவடிக்கைகளுக்குப் பின்னர், அம்மாநில நிலவரம் குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகின்றன. காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தியும் சில கருத்துகளை கூறியிருந்தார். இதற்கு பதிலளித்த மாநில ஆளுநர் சத்யபால் மாலிக், தவறான தகவல்களை ராகுல் காந்தி பரப்புகிறார். வேண்டுமானால் சிறப்பு விமானம் ஏற்பாடு செய்கிறேன். அவர் காஷ்மீரிருக்கு நேரில் வந்து நிலவரத்தை பார்வையிடலாம் எனவும் அழைப்பு விடுத்திருந்தார்.

காஷ்மீர் ஆளுநர் மாலிக் அழைப்பு விடுத்த சிறிது நேரத்திலேயே அதை ஏற்பதாக ராகுல் காந்தி ரியாக்சன் காட்டினார். விமானம் எதுவும் வேண்டாம். எதிர்க்கட்சி தலைவர்கள் குழுவுடன் காஷ்மீர் வருகிறேன். எந்த கட்டுப்பாடுகளும் விதிக்காமல், சுதந்திரமாக அங்குள்ள மக்களையும், எதிர்க்கட்சி தலைவர்களையும், ராணுவ வீரர்களையும் சந்திக்க வழிவகை செய்தால் போதும் என ராகுல் கூறியிருந்தார்.

ராகுல் காந்தியின் இந்த வேண்டுகோளுக்கு பதிலளித்த ஆளுநர் மாலிக், காஷ்மீரை வைத்து ராகுல் காந்தி அரசியல் செய்யப் பார்க்கிறார். எதிர்க்கட்சி தலைவர்களிடமும் மக்களிடமும் பதற்றத்தை ஏற்படுத்த பார்க்கிறார். காஷ்மீர் வருவதற்கு நிபந்தனைகளையும் விதிக்கிறார் என்று கூறியிருந்தார். இவ்வாறு ராகுல் காந்தியும், காஷ்மீர் ஆளுநர் மாலிக்கும் அடுத்தடுத்து வார்த்தைப் போர் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் ராகுல் காந்திக்கு ஆதரவாக காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரம் டுவிட்டரில் கருத்து பதிவிட்டுள்ளார். அதில், ராகுல் காந்தி நிபந்தனை விதிக்கிறார் என காஷ்மீர் ஆளுநர் கூறுவது அபத்தமானது. சுதந்திரமாக அனைவரையும் சந்திக்க வேண்டும் என்று தான் ராகுல் கேட்டுள்ளார். இது எப்படி நிபந்தனையாகும்? ராகுல் காந்திக்கு ஆளுநர் விடுத்த அழைப்பில் உண்மை இருப்பதாக தெரியவில்லை. வெற்று பிரசார கருவியாக இதனை பயன்படுத்த ஆளுநர் மாலிக் முயற்சிக்கிறார் என ப.சிதம்பரம் பதவிட்டுள்ளார்.

விமானம் வேண்டாம்; அனுமதி மட்டும் கொடுங்கள் : காஷ்மீர் ஆளுநரின் சவாலுக்கு ராகுல்காந்தி பதிலடி

You'r reading ராகுல் காந்திக்கு காஷ்மீர் ஆளுநர் அழைப்பு விடுத்தது வெற்று பிரச்சாரம் ப.சிதம்பரம் சாடல் Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - மே.இ.தீவுகளுடன் இன்று கடைசி ஒருநாள் போட்டி; தொடரை வெல்லுமா இந்தியா? பயமுறுத்தும் மழை

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்