குஷ்புவை சேர்த்துக் கொண்ட பாஜக எங்களை சேர்க்கவில்லை: கருணாஸ் ஆதங்கம்

குஷ்புவை சேர்த்துக் கொண்ட பாஜக எங்களை கட்சியில் சேர்க்க வில்லை என
என்று கருணாஸ் ஆதங்கப்பட்டார்.

முக்குலத்தோர் புலிப்படை தலைவர் கருணாஸ் கடந்த 24ம் தேதி சென்னையிலிருந்து தெய்வீக யாத்திரை தொடங்கி ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் முத்துராமலிங்க தேவரின் நினைவிடத்தில் நேற்று இரவு நிறைவு செய்தார் .

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், மதுரை விமான நிலையத்திற்கு பசும்பொன் தேவர் பெயரைச் சூட்ட வேண்டும் ஜெயலலிதா அறிவித்த கள்ளர் மறவர் அகமுடையர் 3 இனத்தையும் சேர்த்து தேவர் இனம் என அரசாணையை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட 12 கோரிக்கைக்காக தெய்வீக யாத்திரை நடத்தி உள்ளோம். எங்களை மதித்து பேச்சுக்கு அழைப்பவர்களுடன் செல்வோம். முதல்வர் எங்களை அழைப்பார் என்று நம்பிக்கை இருக்கிறது.

மீண்டும் எம் எல்.ஏ. ஆகும் எண்ணம் எனக்கு இல்லை, எனக்கு அரசியல் தொழிலும் இல்லை, நான் கூத்தாடி தொழில் செய்து வருகிறேன், என் இனத்தை சேர்ந்தவர்கள் அரசியலுக்கு வர வேண்டும் என ஆசை படுகிறேன், அம்மா ஒரு சீட்டு கொடுத்தார்கள், தற்போது இரண்டு சீட் கொடுங்கள் ஜெயித்து வருகிறோம் என சொல்கிறோம். முக்குலத்தோர் புலிப்படை தவிர்க்க முடியாத சக்தி. அதிமுக கட்சி முக்குலத்தோர் சமுதாயத்திற்கு எதுவும் செய்ய வில்லை என்பதை ஒட்டு மொத்த சமுதாயமும் உணர்ந்து விட்டது. சசிகலாவை மருத்துவ மனையில் இருந்து வந்த உடன் நிச்சயம் சந்திப்பேன்.

அதிமுகவில் சசிகலா இணைவது அவர்கள் கட்சி பிரச்னை. இபிஎஸ், ஓபிஸ் என இரு பிரிவாக அடித்து கொண்டதால் கடந்த இரு வருடமாக தொகுதி பக்கமே செல்லவில்லை. நலத்திட்டம் கூட செய்யவில்லை என்றும்

பிஜேபி யில் சில காலத்திற்கு முன் கூப்பிட்டார்கள். பிஜேபி யில் குஸ்பு வை சேர்த்து கொண்டார்கள்,எனோஎங்களை சேர்க்க வில்லை என்றார்.

You'r reading குஷ்புவை சேர்த்துக் கொண்ட பாஜக எங்களை சேர்க்கவில்லை: கருணாஸ் ஆதங்கம் Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - மேலாடையை நீக்காமல் உடலை தொடுவது பலாத்கார குற்றமல்ல சர்ச்சை பெண் நீதிபதி மீது நடவடிக்கை

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்