புதுச்சேரி : ராஜினாமா செய்த திமுக எம்எல்ஏ கட்சியிலிருந்து நீக்கம்

புதுச்சேரியில் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்த வெங்கடேசன் திமுகவில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டு இருக்கிறார். தட்டாஞ்சாவடி தொகுதி எம்எல்ஏ வெங்கடேசன் நேற்று தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்திருந்தார். சபாநாயகரிடம் ராஜினாமா கடிதம் கொடுத்த கையோடு செய்தியாளர்களை சந்தித்த அவர் எனது தொகுதியில் அடிப்படை வசதிகூட இந்த அரசால் செய்து கொடுக்க முடியவில்லை என்ற வேதனையுடன் ராஜினாமா செய்ததாக சொன்னார்.

நான் ராஜினாமா செய்வது கட்சி தலைமைக்கு தெரியும். சட்டமன்ற உறுப்பினர் பதவியை மட்டும் தான் ராஜினாமா செய்து இருக்கிறேன். திமுகவில் இருந்து விலகவில்லை. மாற்றுக் கட்சியில் கட்சியில் இருந்து யாரும் என்னிடம் எதுவும் பேசவில்லை எனவும் சொல்லி இருந்தார். ஆனால் அவர் தனது ராஜினாமா குறித்து கட்சித் தலைமையிடம் அனுமதி பெறவில்லை என்று பின்னர் தெரிய வந்தது.
இதை தொடர்ந்து அவர் திமுகவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளார். இதற்கான அறிவிப்பை கட்சியின் செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ளார்.

You'r reading புதுச்சேரி : ராஜினாமா செய்த திமுக எம்எல்ஏ கட்சியிலிருந்து நீக்கம் Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - பாண்டிச்சேரி அரசு பணால்: பாஜக தான் காரணமா?

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்