எக்ஸிட் போல் அதிமுக சரிவுக்கு இது தான் காரணமா? – வெளியான அதிர்ச்சி தகவல்!

அதிமுக எக்ஸிட் போலில் பின்னடவை சந்தித்துள்ளது. நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கையில் திமுக வெற்றி பெறும் என எக்ஸிட் போல் சர்வேக்கள் கூறுகின்றன.

தமிழக சட்டமன்ற தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் நேற்று வெளியாகின. இதில், பெரும்பாலான இடங்களில் அதிமுக வெற்றியை அமமுக தடுப்பதாகவே பார்க்கப்படுகிறது. தமிழக சட்டமன்ற தேர்தலில் அதிமுக, பாமக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் மெகா கூட்டணி அமைத்து தேர்தலை எதிர்கொண்டனர். இதில் அதிமுக எங்கே சரிந்தது என்று பார்க்கும்போது, அதனை தேர்தலுக்கு பிந்தைய கருத்துகணிப்புகள் தெளிவாக காட்டுகின்றன.

அதாவது அதிமுக எக்ஸிட் போல் கருத்துக்கணிப்பின் படி, , 56 தொகுதிகளில் இருந்து 68 தொகுதிகள் வரை மட்டுமே வெற்றி பெற முடியும் என பெரும்பான்மையான கருத்து கணிப்புகள் கூறுகின்றன. இதற்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுவது, அதிமுகவின் வாக்கு வங்கியை அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் பிரிக்கிறது. இதன் மூலம் பல்வேறு தொகுதிகளில் அதிமுகவிற்கு வெற்றி வாய்ப்பு அமமுகவால் பறிபோகும் நிலை ஏற்பட்டுள்ளது.

அமமுகவ, தேமுதிக, எஸ்.டி.பி.ஐ. உள்ளிட்ட சிறிய கட்சிகளை கூட்டணியில் அமைத்து முதல்முறையாக சட்டமன்றத் தேர்தலை எதிர்கொண்டது. இதில், அமமுக 4 முதல் 6 தொகுதிகளில் வெற்றிபெறும் என்பது தமிழக அரசியலில் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. ரிபப்ளிக், பி-மார்க், உள்ளிட்ட செய்தி நிறுவனங்கள் வெளியிட்ட கருத்துக் கணிப்பு முடிவுகளால் அமமுக வட்டாரம் மிகுந்த மகிழ்ச்சியும், உற்சாகமும் கொண்டுள்ளது.

சட்டமன்றத் தேர்தலின் போது அமமுகவை அதிமுகவுடன் இணைக்க வேண்டும் பாஜக பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டது. இதற்கு ஈபிஎஸ் தரப்பு ஒத்துழைக்காததால் சசிகலாவை அரசியலிலிருந்து சற்று ஒதுங்கியிருக்க கோரி பிஜேபி வலியுறுத்தியதாக தகவல் வெளியானது. இந்நிலையில், அதிமு வட்டாரங்களில், வரும் காலத்தில் திமுகவை எதிர்கொள்ள அமமுகவுடன் அதிமுக இணைய வேண்டும் இல்லாவிட்டால், சசிகலா அதிமுகவுக்கு தலைமையேற்க வேண்டும் என்ற குரல்கள் ஓங்கி ஒலிக்க தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

You'r reading எக்ஸிட் போல் அதிமுக சரிவுக்கு இது தான் காரணமா? – வெளியான அதிர்ச்சி தகவல்! Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - போட்டோகிராஃபர் டூ இயக்குநர் - கே.வி.ஆனந்தின் வாழ்க்கை பயணம்!

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்