மோடியின் முஸ்லிம் காங்கிரஸ் விமர்சனம்- வலுக்கும் கண்டனங்கள்

உத்தர பிரதேசத்தில் உள்ள அசாம்கர் பகுதியில் சில நாட்களுக்கு முன்னர் பேசிய பிரதமர் மோடி, ‘காங்கிரஸ், முஸ்லீம் மக்களின் கட்சியாக மட்டுமே இருக்கிறது. காங்கிரஸ் மற்றும் எரிர்கட்சிகள் முத்தலாக் சட்டத்தை ஏன் எதிக்கின்றன.

பெண்களின் பாதுக்காப்புக்காக, குறிப்பாக முஸ்லீம் பெண்களின் பாதுகாப்புக்காக அரசு சார்பில் எடுக்கப்படும் நடவடிக்கைகளை ஏன் காங்கிரஸ் முடக்கப் பார்கிறது’ என்று பேசினார். இதற்கு எதிர்கட்சிகள் தரப்பிலிருந்து கடுமையான விமர்சனங்கள் வைக்கப்பட்டன.

இந்நிலையில் பிரதமரின் விமர்சனம் குறித்து காங்கிரஸ் கட்சியின் மூத்தத் தலைவர்களில் ஒருவரான ஆனந்த் ஷர்மா, ‘பிரதமர், அவரின் பதவிக்கான மாண்புக்குத் தொடர்ந்து கலங்கம் விளைவித்து வருகிறார். அவர் காங்கிரஸ் குறித்து சொன்ன கூற்றுகளுக்கு நாங்கள் கண்டனம் தெரிவிக்கிறோம். இது அவரின் மனநிலை எவ்வளவு நோயுற்றிருக்கிறது என்பதையும் குழம்பியுள்ளது என்பதையும் எடுத்துக் கூறுகிறது.

அவரின் இந்த நோயுற்ற மனநிலை நம் தேசத்துக்கே கவலை அளிக்கக் கூடியவை. வரலாற்றில் இல்லாத தகவல்களை தரவுகளையும் பிரதமர் சொல்லி வருகிறார். பொய்களின் மொத்த உருவமாக அவர் மாறியுள்ளார். வரலாறு குறித்த அறிவும் அவருக்கு இருப்பதாக தெரியவில்லை. பொய்யான விஷயங்களை அவர், வரலாற்றுச் செய்திகளாக கூறி வருகிறார். காங்கிரஸ் இந்தியர்கள் அனைவருக்குமான கட்சி. நாட்டின் பன்முகத்தன்மையை ஏற்று மதிக்கும் கட்சி’ என்று கூறியுள்ளார்.

You'r reading மோடியின் முஸ்லிம் காங்கிரஸ் விமர்சனம்- வலுக்கும் கண்டனங்கள் Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - போதையில் ரகளை: நண்பர்களுடன் சிக்கிய பாபி சிம்ஹா

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்