தமிழக உரிமைகளை ஒருநாளும் விட்டுத்தர மாட்டோம்!- அமைச்சர் ஜெயகுமார்

'தமிழக அரசின் உரிமைகளை எளிதில் விட்டுத்தர மாட்டோம்' என தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

தற்போது செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார், "அணை பாதுகாப்பு மசோதா, யுஜிசி விவகாரத்தில் தமிழகத்தின் உரிமைகளை விட்டுத்தர மாட்டோம் தமிழக அரசை கலந்தாலோசிக்காமல் மத்திய அரசு எடுக்கும் எந்த முடிவுக்கும் ஒத்துழைக்க மாட்டோம்.

எந்த நிலையிலும் மாநிலத்தின் உரிமையை விட்டுக்கொடுக்க மாட்டோம். அதை அதிமுக அரசு ஒரு போதும் அனுமதிக்கவும் செய்யாது. திமுக ஆட்சிக் காலத்தில் தான் விஞ்ஞான முறையில் ஊழல் நடைபெற்றுள்ளது. நீட் தேர்வை தமிழில் எழுதிய மாணவர்களுக்கு கருணை மதிப்பெண் வழங்க வேண்டிய பொறுப்பு சிபிஎஸ்இ-க்கு உள்ளது. நீட் தேர்வில் இருந்து தமிழகம் விலக்கு பெற வேண்டும் என்பது தான் தமிழக அரசின் இலக்கு" எனக் கூறினார்.

You'r reading தமிழக உரிமைகளை ஒருநாளும் விட்டுத்தர மாட்டோம்!- அமைச்சர் ஜெயகுமார் Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - ரஜினி மக்கள் மன்றக் கூட்டம்- ஜூலை 18 முதல் அறிவிப்பு

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்