தேமுதிக-வை தூக்கி நிறுத்த கட்சி எடுத்த புதிய முடிவு... எடுபடுமா?

தேமுதிக-வை தூக்கி நிறுத்த கட்சி புதிய முடிவு

விஜயகாந்த் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் சில நாட்களாகவே தேமுதிக இருக்கும் இடம் தெரியாமல் உள்ளது. எனவே அக்கட்சி ஒரு அதிரடி முடிவை எடுத்துள்ளது. அதாவது விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரனை அரசியல் களத்தில் இறக்க முடிவு செய்துள்ளனர்.

கருணாநிதி, ஜெயலலிதா என இரு அரசியல் ஜாம்பாவான்கள் முன்னிலையில் தனி ஆளாக அரசியலில் பிரவேசித்தவர் விஜயகாந்த். ரஜினி அந்நாளில் அரசியலில் நுழைய பின்வாங்கினார்.

விஜயகாந்தின் அரசியல் பிரசாரம் பாமர மக்களுக்கு புரியாமல் போகலாம் ஆனால் அவரின் வார்த்தைகள் அனைத்தும் அரசியல் தலைவர்களை கூர்ந்து கவனிக்க செய்தது.

பண்ருட்டி ராமசந்திரன் உடனிருந்த போது 27 லட்சத்திற்கும் அதிகமான வாக்குகளை பெற்று வியப்பில் ஆழ்த்தினார்.

பெரும்பாலும் விஜயகாந்த் மீது வைக்கப்பட்ட குற்றசாட்டு எதுவெனில், பொது இடத்தில் தொண்டர்களை அடித்துவிடுவது என்பதுதான்.

விஜயகாந்த்துக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் அக்கட்சியில் இருப்பவர்கள் மாற்று கட்சியை தேடி வருகின்றனர். அதனால் விஜயகாந்தின் மூத்த மகன் விஜய பிரபாகரனுக்கு இளைஞரணி பொறுப்பு தர ஏற்பாடு செய்யப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

இதில் விஜய பிரபாகரனுக்கு பொறுப்பை கொடுத்தால் அது கட்சியில் விஜயகாந்துக்காகவே காத்துக் கிடந்த மூத்த நிர்வாகிகளுக்கு அதிருப்தியை ஏற்படுத்தும்.

இந்நிலையில் தமிழக மக்கள் விஜயகாந்த் அளவிற்கு அவரது மகனுக்கு இடம் கொடுப்பார்களா என்பது சந்தேகமே. அதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

You'r reading தேமுதிக-வை தூக்கி நிறுத்த கட்சி எடுத்த புதிய முடிவு... எடுபடுமா? Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - ரகுராம் ராஜனின் குற்றச்சாட்டை மறுக்கும் காங்கிரஸ்

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்