டாஸ்மாக்கில் கொண்டாடப்பட்ட எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா

டாஸ்மாக்கில் கொண்டாடப்பட்ட எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா

கடந்த வருடங்களாக எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா மாவட்டமெங்கும் சிறப்பாக நடைப்பெற்று வருகிறது. இந்நிலையில் சென்னையில் நேற்று நடந்த எம்.ஜி.ஆர் நூற்றாண்டு நிறைவு விழாவிற்கு வந்த அதிமுகவினர் சரக்கிற்காக ஒயின் ஷாப்பில் முட்டி மோதிக்கொண்டது பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா நேற்று சென்னை நந்தனம் பகுதியில் உள்ள ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடைபெற்றது. இதனால் சென்னை முழுவதும் பல இடங்களில் பிரம்மாண்டமான பேனர்கள் வைக்கப்பட்டது. எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவில் பங்கேற்க தமிழகமெங்குமிலிருந்து ஏராளமாக தொண்டர்கள் சென்னைக்கு வரவழைக்கப்பட்டனர். நேற்று முன்தினமே ஏராளமான தொண்டர்கள் சென்னைக்கு வந்து சேர்ந்தனர்.

வந்த கையோடு அவர்கள் டாஸ்மாக்கை நோக்கி படையெடுத்தனர். இதனால் டாஸ்மாக்கில் ஏராளமான கூட்டம். ஒருவரை ஒருவர் முந்திக்கொண்டு அவர்கள் மதுபாட்டில்களை வாங்கினர். இவர்கள் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவிற்கு வந்தார்களா? அல்லது சரக்கடிக்க வந்தார்களா என்றே குழப்பம் மக்களிடையே ஏற்படுத்தியது. ஏனென்றால் விழாவில் இருந்த கூட்டத்தை விட ஒயின்ஷாப்பில் தான் அதிக கூட்டம் இருந்தது. இன்னும் என்னவெல்லாம் செய்வார்களோ!

You'r reading டாஸ்மாக்கில் கொண்டாடப்பட்ட எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - இன்றைய (01.10.2018) ராசிப்பலன்

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்