கள்ள நோட்டு விவகாரம் அதிமுக பிரமுகரை தேடிவரும் போலீசார்!சென்னையில்

Fake money in chennai police searching ADMK Personality

சென்னை அமைந்தகரையில் 35 ஆயிரம் ரூபாய் அளவுக்கு கள்ளநோட்டுகளுடன் பிடிபட்ட பெண் கொடுத்த தகவலின் அடிப்படையில் கொளத்தூர் அதிமுக வட்டச்செயலாளர் ஒருவரை போலீசார் தேடி வருகின்றனர்.

சென்னை சைதாப்பேட்டை மேற்குஜோன்ஸ் சாலை பகுதியை சேர்ந்த வனிதா. அண்ணா நகர் ஹை ஸ்டைல் கடையில் கேஷியராகப் பணியாற்றிவருகிறார். இவர் அமைந்தகரையில் ரயில்வே காலனி 3ஆவது தெருவில் உள்ள சோனியா மருந்துக் கடைக்கு சென்று 2 ஆயிரம் ரூபாய் கொடுத்து 300 ரூபாய்க்கு மருந்து வாங்கிவிட்டு மீதம் ஆயிரத்து 700 ரூபாயை பெற்றுக்கொண்டு புறப்பட்டுள்ளார். கடைக்காரர்களுக்கு 2000 ரூபாய் நோட்டின் மீது சந்தேகம் வரவே  வனிதாவை அழைத்துள்ளனர்.

ஆனால் அவர் விறுவிறுவென்று இருசக்கர வாகனத்தில் புறப்பட்டுச்சென்றுள்ளார். அவரை பின்தொடர்ந்து சென்றபோது வேறொரு மருந்துக் கடைக்குள் வனிதா சென்று அங்கும் 2 ஆயிரம் ரூபாய் நோட்டை மாற்றமுயன்றபோது கையும் களவுமாக பிடித்து போலீசாருக்கு தகவல்கொடுத்து ஒப்படைத்துள்ளனர்.

வனிதாவிடம் இருந்து 35 ஆயிரத்து 500 ரூபாய் அளவுக்கு கள்ளநோட்டுகளை பறிமுதல் செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

உடன் பணியற்றுபவர் மூலமாக பழக்கமான கொளத்தூரை சேர்ந்த வழக்கறிஞரும் 24ஆவது வார்டு வட்டச் செயலாளருமான காமேஷ் என்பவர் கள்ளநோட்டுகளை தம்மிடம் தந்ததாக வனிதா கூறியுள்ளார். இதன் பேரில் காமேஷை போலீசார் தேடி வருகின்றனர்.

You'r reading கள்ள நோட்டு விவகாரம் அதிமுக பிரமுகரை தேடிவரும் போலீசார்!சென்னையில் Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - தமிழகத்தில் முதன்முறையாக இ-கோர்ட்- திருவண்ணாமலையில் ஆரம்பம்

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்