மீடூ விவகாரத்தில் திமுக மூத்த தலைவர் ஸ்டாலின்?!

DMK senior leader Stalin in the matter of Me Too

நமது நாட்டையே ஒரு கலக்கு கலக்கி கொண்டிருக்கும் இணையதளச் சுனாமிதான் மீடூ விவகாரம். திரைத்துறை மட்டுமல்லாது அனைத்து துறைகளிலும் பெரும் பிரளயத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

இதுமாதிரியான பாலியல் விவகாரங்கள் முதலில், வட மாநிலத்தில் உருவானது. இதில் பிரபாலனவர்களின் இமேஜ் காவு வாங்கப்பட்டாலும் கூட, மெல்ல மெல்ல தைரியம் கொண்டு சமூகத்தில் ஒரு நல்ல மாற்றம் வர வேண்டும் என்பதற்காக இந்த இயக்கம் தற்போது பெண்களின் கூட்டமைப்பில் உலகம் முழுவதும் ஓங்கி ஒலித்துக்கொண்டிருக்கிறது. ஆனால் தழிழ்நாட்டில் சின்மயினால் தான் இவ்விவகாரம் பெரூம் தீயாய் பரவியது.

அதன் பிறகு பல பிரபலங்கள் மன்னிப்பு கேட்டார்கள். இன்னும் எத்தனை கருப்பு ஆடுகள் அதிகாரப்போர்வைக்குள்ளும், பணபலத்தின் கூட்டுக்குள்ளும் உண்மையை மறைத்துவைத்து ஒளிந்து கொண்டிருப்பார்கள் என பார்ப்போம்.பேறுகால இறுதிநாளில் தாய்தன் சிசுவை வயிற்றில் உந்தி வெளியே தள்ளூவது போல, இந்த காலமும் கூடிய விரைவில் பாதிக்கப்பட்ட  பெண்களுக்கு ஆதரவு கரம் நீட்டியிருக்கும் இந்த மீடூ மூலமாக சில கசப்பான உண்மைகளை வெளியே கொண்டுவரும் என்பதில் சந்தேகமில்லை.

இந்நிலையில் அரசியல் தலைவ்ர்கள், அமைசர்கள் மீது மீடூ சர்ச்சை எழுந்துள்ளது. அதன் அடுத்த படியாக  தி.மு.க.தலைவர் ஸ்டாலின் ,துரைமுருகன் மற்றும் இன்னும் சில திமுக தலைவர்கள் மீது பாலியல் குற்றசாட்டுகள் உள்ளதாக அதிமுக அமைச்சர் திடீரென குற்றம் சாட்டியுள்ளார்.

இதனால் அடுத்து தமிழகத்தில் என்ன நடக்குமோ என்ற பரபரப்பு தொற்றிகொண்டுள்ளது. தன் மீதான குற்றசாட்டுகுறித்து தி.மு.க.தலைவர் ஸ்டாலின் என்ன விளக்கம் தரப்போகிறார் என அரசியல் விமர்சகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

You'r reading மீடூ விவகாரத்தில் திமுக மூத்த தலைவர் ஸ்டாலின்?! Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - தெலங்கானாவில் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்த காவல்துறையினர்

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்