சீனா-பாகிஸ்தான் உறவில் ஒரு புதிய அத்தியாயம் உருவாகும்: இம்ரான் கான்

Imran Khan says New episode will create China-Pakistan relations

சீனாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், சீனா பாகிஸ்தான் உறவில் ஒரு புதிய அத்தியாயம் உருவாகும் என தெரிவித்துள்ளார்.

தெரிக் இ இன்சாப் கட்சியின் தலைவரும் முன்னாள் கிரிக்கெட் வீரருமான இம்ரான் கான் பாகிஸ்தான் பிரதமராக பதவி ஏற்றார். இதன் பிறகு அவர் மேற்கொள்ளும் முதல் அரசுமுறை பயணமாக இம்ரான் கான் நான்கு நாட்கள் சீனாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.

நேற்று அதிகாலை பெய்ஜிங் சென்றடைந்த இம்ரான் கானுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.
இதையடுத்து, தியானன்மென் சதுக்கத்தில் அமைந்துள்ள அரசு அரங்கில் சீன அதிபர் ஜி ஜிங்பிங்கை இம்ரான் கான் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

சீனா மற்றும் பாகிஸ்தான் இடையிலான உறவை மேம்படுத்துவதற்கு இந்த சுற்றுப்பயணம் உதவும். இதன்மூலம், இருதரப்பு உறவில் ஒரு புதிய அத்தியாயம் உருவாகும் என இருநாட்டு அதிகாரிகளும் தெரிவித்தனர்.

மேலும், பாகிஸ்தான் பிரதமராக பொறுப்பேற்றுள்ள இம்ரான் கானின் இந்த சீனப் பயணம் அவரது முதல் வெளிநாட்டு பயணம் என்பது குறிப்பிடத்தக்கது.

You'r reading சீனா-பாகிஸ்தான் உறவில் ஒரு புதிய அத்தியாயம் உருவாகும்: இம்ரான் கான் Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - இணையத்தில் லீக்கான அக்‌ஷராவின் ஹாட் செல்ஃபிக்கள்!

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்