ராஜீவ் வழக்கில் 7 தமிழர் விடுதலை குறித்த கேள்வியும் ரஜினியின் குதர்க்க பதிலும்!

Rajinikanth on Seven Tamils Issue

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கால் நூற்றாண்டாக சிறையில் வாடும் 7 தமிழர் குறித்த கேள்விக்கு நடிகர் ரஜினிகாந்த் குதர்க்கமான பதிலை அளித்து அதிர்ச்சியளித்துள்ளார்.

ரஜினிகாந்த் ‘சிஸ்டம்’ சரியில்லை என கூறி அரசியல் கட்சி தொடங்குவேன் என அறிவித்தார். ஆனால் இன்னமும் அரசியல் கட்சியை தொடங்கவில்லை.

மேலும் தம்மிடம் கொள்கை என்ன என்று ஒரு செய்தியாளர் கேள்வி கேட்க, எனக்கு ஒரு நிமிடம் தலை சுத்திருச்சி என பேசி விமர்சனங்களுக்குள்ளானார். இப்போது மீண்டும் அதிர்ச்சி தரும் குதர்க்க பதிலை ரஜினிகாந்த் தெரிவித்திருக்கிறார்.

சென்னை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த ரஜினிகாந்திடம் 7 தமிழர் விடுதலை விவகாரம் குறித்து கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு ரஜினிகாந்த், யார் 7 பேர்? எந்த 7 பேர். அதுபற்றி எனக்கு தெரியாது என கிண்டலாக பதில் தந்துள்ளார்.

அதேபோல் பாஜகவுக்கு எதிராக மெகா கூட்டணி அமைக்கப்படுகிறது- அந்த அளவுக்கு ஆபத்தான கட்சியா? என்ற கேள்வி, அப்படின்னு எதிர்க்கட்சியினர் நினைத்தால் கண்டிப்பாக அப்படித்தானே இருக்கும் என பதில் கூறியிருக்கிறார்.

மேலும் பணமதிப்பிழப்பு நடவடிக்கையை பாஜக சரியாக பயன்படுத்தவில்லை எனவும் சாடினார் ரஜினிகாந்த்.

நன்றி: புதியதலைமுறை

You'r reading ராஜீவ் வழக்கில் 7 தமிழர் விடுதலை குறித்த கேள்வியும் ரஜினியின் குதர்க்க பதிலும்! Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - இலங்கையில் ஆர்.எஸ்.எஸ். தீவிர ஆதரவாளர் சச்சிதானந்தத்துடன் திருமாவளவன் சந்திப்பு- வெடிக்கும் புதிய சர்ச்சை

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்