சட்டுனு செய்யலாம் ஸ்பைசி புதினா சட்னி ரெசிபி!

Spicy Pudhina Chutney recipe

இட்லி, தோசைக்கு கச்சிதமான மற்றும் ஆரோக்கியம் தரும் சைட் டிஷ் புதினா சட்னி எப்படி செய்யலாம்னு பார்க்க போறோம்.

தேவையான பொருட்கள்:

புதினா                   - ஒரு கட்டு
சீரகம்                     - சிறிதளவு
பச்சை மிளகாய்   - 5
பூண்டு                   - 10
உப்பு                      - தேவைக்கேற்ப
கடலைப்பருப்பு    - சிறிதளவு
காய்ந்த மிளகாய் - சிறிதளவு
உளுந்து                 - சிறிதளவு
மஞ்சள் தூள்          - சிறிதளவு
தேங்காய்              - 2 பத்தை

செய்முறை :

கடாயில் எண்ணெய் ஊற்றி அது காய்ந்ததும் கடலை பருப்பு, உளுத்தம் பருப்பு போட்டு வதக்கவும்.

பருப்பு நிறம் மாறியதும், அதில் பூண்டு, காய்ந்த மிளகாய், பச்சை மிளகாய் போட்டு வதக்கவும்.

பிறகு, தண்ணீரில் அலசி சுத்தம் செய்த புதினாவை அத்துடன் சேர்த்து நன்றாக கிளறவும்.

இறுதியாக, தேங்காய் துண்டுகள், உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக வதக்கி இறக்கவும்.

இதனை மிக்சியில் போட்டு சட்னி பதத்திற்கு அரைத்துக் கொள்ளவும்.
பிறகு, ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, சீரகம், கறிவேப்பிள்ளை போட்டு தாளித்து சட்னியுடன் சேர்த்து கிளறவும்.

அவ்ளோதாங்க.. சுவையான புதினா சட்னி ரெடி !

You'r reading சட்டுனு செய்யலாம் ஸ்பைசி புதினா சட்னி ரெசிபி! Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - இந்திராகாந்தி போல் வசீகரமானவர்.. மக்களிடமும் செல்வாக்கு பெறுவார்.. பிரியங்கா குறித்து சிவசேனா வர்ணனை!

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்