ரெஸ்டாரன்ட் ஸ்டைல் மஷ்ரூம் மசாலா ரெசிபி.. ! (வீடியோ)

Restaurant Style Mushroom Masala Recipe

அப்போதெல்லாம் மஸ்ரூம் சாப்பிடணும்னா பெரிய ஹோட்டலுக்கோ இல்ல ரெஸ்டாரன்டுக்கோ தாங்க போகணும்.. ஆனா இப்போ அப்படி இல்லைங்க.. ரெஸ்டாரன்ட் ஸ்டைல்ல நாம வீட்டிலேயே மஷ்ரூம் ரெசிப்பீஸ் ஈஸியா சமைக்கலாம் ..

அந்த வகையில் இன்னைக்கு நாம மஷ்ரூம் மசாலா ரெசிபி எப்படி செய்யறதுன்னு பார்க்க போறோம்..

தேவையான பொருட்கள்:

தக்காளி

இஞ்சி, பூண்டு பேஸ்ட்

மல்லி தூள்

மஞ்சள் தூள்

கரம் மசாலா

ஸ்மாஷ் செய்த உருளைக்கிழங்கு

உப்பு

மிளகாய்த்தூள்

நறுக்கிய வெங்காயம்

நறுக்கிய மஷ்ரூம்

சீரகம்

சோம்பு

பட்டை

கறிவேப்பிலை

செய்முறை:

முதலில் ஒரு பௌலில் 3 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி பட்டை, சோம்பு, சீரகம், கறிவேப்பிலை போட்டு வதக்கவும். பிறகு இஞ்சி பூண்டு பேஸ்ட், வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கவும்.

வெங்காயத்தின் பச்சை வாசனை போன பிறகு நறுக்கிய தக்காளி சேர்த்து நன்றாக வதக்கவும்.
அத்துடன் தேவையான உப்பு சேர்த்து கிளறவும்.

பின்னர் நறுக்கி வைத்த மஷ்ரூமை சேர்த்து நன்றாக கிளறவும். மஷ்ரூம் ஓரளவுக்கு வதங்கியதும் மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லி தூள், கரம் மசாலா, மசித்த உருளைக்கிழங்கு ஆகியவற்றுடன் கொஞ்சம் தண்ணீர் சேர்த்து கிளறவும்.

மஷ்ரூம் நன்றாக வதங்கியதும் அதை ஒரு தட்டில் போட்டு கொத்தமல்லி தூவி பரிமாறவும்..

அவ்ளோதாங்க சுவையான ரெஸ்டாரன்ட் மஸ்ரூம் மசாலா ரெசிபி ரெடி..!

இந்த ரெசிபியின் செய்முறையை பார்க்கணுமா..? கீழே இருக்கும் வீடியோவை கிளிக் செய்யுங்க..

You'r reading ரெஸ்டாரன்ட் ஸ்டைல் மஷ்ரூம் மசாலா ரெசிபி.. ! (வீடியோ) Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - நீட் மசோதாவுக்கு ஒப்புதலை பாஜகவுடனான கூட்டணிக்கான நிபந்தனையாக முன்வைப்பாரா முதல்வர் எடப்பாடி பழனிசாமி? ஸ்டாலின் கேள்வி

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்