சூப்பர் சைட் டிஷ் கொத்தமல்லி சட்னி ரெசிபி இதோ.. (வீடியோ)

Super SideDish Coriander Chutney recipe

காலை உணவுக்கு தொட்டுக்க ஈஸியான சைட் டிஷ் கொத்தமல்லி சட்னி எப்படி செய்றதுன்னு இப்போ பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:

புளி

சீரகம்

உப்பு

உளுத்தம் பருப்பு

பூண்டு

மஞ்சள்தூள்

காய்ந்த மிளகாய்

பச்சை மிளகாய்

தேங்காய்

கடலைப்பருப்பு

கொத்தமல்லி ஒரு கட்டு

செய்முறை:

ஒரு கடாயில் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, சீரகம் ஆகியவை சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.

அத்துடன் காய்ந்த மிளகாய், பச்சை மிளகாய், பூண்டு ஆகியவை சேர்த்து நன்றாக வதக்கியதும் தேங்காய், புளி சேர்த்து கிளறவும். பின்னர் கொத்துமல்லியை சேர்த்து நன்றாக வதக்கவும்.

இறுதியாக, மஞ்சள் தூள், உப்பு சேர்த்து கிளறி வதக்கியதும், ஒரு தட்டில் போட்டு ஆறவைக்கவும்.
பிறகு இந்தக் கலவையை மிக்ஸியில் சட்னி பதத்திற்கு அரைக்கவும்.

சட்னி தாளிப்பதற்கு..

கடாயில் ஒன்றரை டேபிள்ஸ்பூன் எண்ணெய் ஊற்றி கடுகு, சீரகம், கறிவேப்பிலை போட்டு தாளித்து சட்னியில் சேர்த்து கிளறவும்.

அவ்வளவுதாங்க சுவையான கொத்தமல்லி சட்னி ரெடி..!

இந்த ரெசிபியின் செய்முறையை பார்க்கணுமா..? கீழே இருக்கும் வீடியோவை கிளிக் செய்யுங்க..

You'r reading சூப்பர் சைட் டிஷ் கொத்தமல்லி சட்னி ரெசிபி இதோ.. (வீடியோ) Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - 'வாட்ஸ்அப்'பை பொய் பிரச்சாரத்திற்கு பயன்படுத்தினால் தடை தான் - இந்திய அரசியல் கட்சிகளுக்கு எச்சரிக்கை!

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்