சருமத்திற்கும், உடலுக்கும் நன்மை தரும் கேரட் கீர்

Healthy Carrot kheer recipe

சருமத்திற்கு பொலிவும், உடலுக்கு நன்மையும் தரும் கேரட் கீர் எப்படி செய்றதுன்னு பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:

கேரட் - 200 கிராம்

பால் - ஒரு கப்

சர்க்கரை - 200 கிராம்

கேசரி பவுடர் - கால் டீஸ்பூன்

ஏலக்காய் - கால் டீஸ்பூன்

செய்முறை:

முதலில் கேரட்டை தோல் சீவி சிறிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.

நறுக்கிய கேரட் துண்டுகளை குக்கரில் போட்டு வேக விடவும்.

பிறகு, ஜாரில் வேகவைத்த கேரட் துண்டுகளுடன் பால், சர்க்கரை, கேசரி பவுடர், ஏலக்காய் ஆகியவை சேர்த்து அரைத்துக்கொள்ளவும்.

அவ்ளோதாங்க.. டம்ளரில் ஊற்றி பிரிட்ஜில் வைத்து பருக கேரட் கீர் ரெடி..!

You'r reading சருமத்திற்கும், உடலுக்கும் நன்மை தரும் கேரட் கீர் Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - `கடைசி முத்தம்; சல்யூட்' - ராணுவ வீரரின் இறுதிச்சடங்கில் கண்கலங்க வைத்த மனைவியின் பாசப்போராட்டம்!

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்