டேஸ்டி முட்டை பொரியல் ரெசிபி

Tasty Egg Poriyal Recipe

சூப்பர் சைட்டிஷ் முட்டை பொரியல் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:

முட்டை - 3

பெரிய வெங்காயம் - 1

தக்காளி - 1

மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்

எண்ணெய் - தேவைகேற்ப

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

முதலில் முட்டையை உடைத்து ஊற்றி உப்பு சேர்த்து நன்றாக அடிக்கவும்.

பிறகு, வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு, கொஞ்சம் கடுகு போட்டு அது வெடித்ததும், வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கவும்.

பின்பு, தக்காளி துண்டுகளைப் சேர்த்து நன்றாக வதக்கவும். அத்துடன் மிளகாய் தூளை சேர்த்து கிளறவும்.

இறுதியாக, கலக்கி வைத்துள்ள முட்டையை மசாலாவுடன் சேர்த்து அடிப்பிடிக்காமல் கிளறிக் கொண்டே இருக்கவும். முட்டை வெந்து பொடியாக ஆனதும் இறக்கவும்.

அவ்ளோதாங்க, சுவையான முட்டை பொரியல் ரெடி..!

You'r reading டேஸ்டி முட்டை பொரியல் ரெசிபி Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - `உலகக்கோப்பை தொடருக்கு அவர் ஏன் செல்லக்கூடாது' - தோனி குறித்து நெகிழும் ரெய்னா!

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்