சுவையான வெஜ் நூடுல்ஸ் ரெசிபி

Tasty Veg Noodles Recipe

குழந்தைகள் விரும்பி சாப்பிடும் வெஜ் நூடுல்ஸ் எப்படி செய்றத்துன்னு இப்போ பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:

நூடுல்ஸ்

வெங்காயம்

தக்காளி

கேரட்

குடைமிளகாய்

முட்டை கோஸ்

தக்காளி சாஸ்

சோயா சாஸ்

சில்லி சாஸ்

வெங்காயத் தாள்

எண்ணெய்

லெமன் ஜூஸ்

மிளகுத் தூள்

உப்பு

செய்முறை:

முதலில், ஒரு பாத்திரத்தில் பாதியளவு தண்ணீர் ஊற்றி, அத்துடன் ஒரு ஸ்பூன் எண்ணெய், உப்பு சேர்த்து சுட வைக்கவும். தண்ணீர் சூடானதும் நூடுல்சை சேர்த்து பாதி வேக வைத்து எடுக்கவும்.

பிறகு, வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வெங்காயம், இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து நன்றாக வதக்கவும்.

பிறகு, நீளவாக்கில் வெட்டி வைத்த கேரட், குடை மிளகாய், முட்டை கோஸ், வெங்காயத் தாள் சேர்த்து நன்றாக வதக்கவும்.

அத்துடன், தக்காளி சாஸ், சில்லி சாஸ், சோயா சாஸ், உப்பு சேர்த்து நன்றாக கிளறவும்.

காய் பாதி வெந்ததும் வேக வைத்த நூடுல்சை மசாலாவுடன் சேர்த்து நன்றாக கிளறி, வேக விடவும். தேவைப்பட்டால் எண்ணெய் சேர்த்துக் கொள்ளலாம்.

நூடுல்ஸ் வெந்ததும், மிளகுத் தூள், எலுமிச்சைப் பழ சாறு, வெங்காயத்தாள் சேர்த்து கிளறி இறக்கினால் சுவையான வெஜ் நூடுல்ஸ் ரெடி..!

You'r reading சுவையான வெஜ் நூடுல்ஸ் ரெசிபி Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு ஆன்லைனில் ஓட்டுப் போடும் வசதியா?- தேர்தல் ஆணையம் மறுப்பு!

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்