மண மணக்கும் நெத்திலி மீன் குழம்பு

Tasty Nethili Fish Curry Recipe

நெத்திலி மீன் குழம்பு என்று சொன்னதும் நாவூறுதா.. ? அப்போ யோசிக்காதீங்க உடனே சமைத்து ருசித்திடுங்க.. எப்படி சமைக்கிறதுன்னு நான் சொல்றேன்.

தேவையான பொருட்கள்:

நெத்திலி மீன் - அரை கிலோ

எண்ணெய் - 4 டீஸ்பூன்

வெந்தயம் - அரை ஸ்பூன்

சீரகம் - அரை ஸ்பூன்

கடுகு - ஒரு ஸ்பூன்

வெங்காயம் - 4

பச்சை மிளகாய் - 2

பூண்டு - 15 பல்

கறிவேப்பிலை

தக்காளி விழுது - ஒரு கப்

தேங்காய்ப்பால் - ஒரு கப்

மிளகாய்த் தூள் - ஒன்றரை ஸ்பூன்

மஞ்சள் தூள் - அரை ஸ்பூன்

சீரகத் தூள் - அரை ஸ்பூன்

மல்லித்தூள் - 2 ஸ்பூன்

புளி கரைசல் - அரை கப்

உப்பு - தேவைக்கேற்ப

கொத்தமல்லி - தேவைக்கேற்ப

செய்முறை:

வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வெந்தயம், சீரகம், கடுகு போட்டு தாளிக்கவும்.

பிறகு, பொடியாக நறுக்கிய வைத்த வெங்காயம், பச்சை மிளகாய், நசுக்கி வைத்த பூண்டு, கறிவேப்பிலலை சேர்த்து பச்சை வாசம் போகும் வரை வதக்கவும்.

வெங்காயம் நன்றாக வதங்கியதும் தக்காளி விழுது சேர்த்து நன்றாக கிளறி வதக்கவும்.

தக்காளியின் பச்சை வாசம் போனதும், மிளகாய்த் தூள், மல்லித்தூள், சீரகத் தூள், மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக கிளறவும்.

அத்துடன், தண்ணீர் மற்றும் புளி கரைசல், உப்பு, கொத்தமல்லி சேர்த்து நன்றாக கொதிக்கவிடவும்.

குழம்பு கொதிக்கும்போது, தேங்காய்ப்பால் ஊற்றி கிளறவும். அத்துடன், சுத்தம் செய்த நெத்திலி மீனை சேர்த்து கிளறி ஒன்று அல்லது இரண்டு நிமிடங்கள் வேக வைத்து கொத்தமல்லித் தூவி இறக்கவும்.

அவ்ளோதாங்க.. சுவையான நெத்திலி மீன் குழம்பு ரெடி..!

You'r reading மண மணக்கும் நெத்திலி மீன் குழம்பு Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - திமுக கூட்டணியில் முஸ்லீம் லீக் கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு!

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்