அடடே என்ன ருசி.. சிக்கன் பொடிமாஸ் ரெசிபி

Yummy Chicken podimas recipe

சிக்கன்ல எத்தனையோ வகை ரெசிபிஸ் செஞ்சிருப்பீங்க.. சிக்கன்ல பொடிமாஸ் செஞ்சிருக்கீங்களா ? இப்போ செய்யலாம் வாங்க..

தேவையான பொருட்கள்:

சிக்கன்   - 250 கிராம்
வெங்காயம் - ஒன்று
இஞ்சி பூண்டு விழுது - 1 டீஸ்பூன்
பச்சை மிளகாய் - 3
கரம் மசாலா - 1 டீஸ்பூன்
மல்லித் தூள் - 1 டீஸ்பூன்
மிளகாய்த் தூள் - 1 டேபிள் ஸ்பூன்
கடுகு                  - கால் டீஸ்பூன்
மஞ்சள் தூள்      - கால் டீஸ்பூன்
கறிவேப்பிலை  - தேவைக்கேற்ப

செய்முறை:

வாணலியில் சிக்கன் துண்டுகள், உப்பு, மஞ்சள் தூள். மிளகுத் தூள் சேர்த்து நன்றாக வேக வைக்கவும்.

சிக்கன் நன்றாக வெந்ததும், ஆற வைத்து ஜாரில் போட்டு திரித்திரியாக அரைக்கவும்.

ஒரு வாணலியில் 2 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, பச்சை மிளகாய் போட்டு தாளிக்கவும். அத்துடன் வெங்காயம், இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்றாக வேக வைக்கவும்.

பிறகு, மஞ்சள் தூள், மல்லித் தூள், மிளகாயத் தூள், கறிவேப்பிலை சேர்த்து நன்றாக வேக வைக்கவும்.

அத்துடன், அரைத்து வைத்த சிக்கனை சேர்த்து நன்றாக கிளறி விடவும்.

அவ்ளோதாங்க.. சுவையான சிக்கன் பொடிமாஸ் ரெடி..!

You'r reading அடடே என்ன ருசி.. சிக்கன் பொடிமாஸ் ரெசிபி Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - மண மணக்கும் நெத்திலி மீன் குழம்பு

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்