பேஷ் பேஷ்.. சுவையான ஃபில்டர் காபி

Tasty Filter coffee recipe

சாதாரண காபியைவிட ஃபில்டர் காபியின் நறுமணமும், சுவையும் அடடே பேஷ் பேஷ் ரொம்ப நல்லா இருக்கு என்று சொல்ல வைக்கும்.. சரி, இப்போ ஃபில்ர் காபி எப்படி செய்றதுன்னு பார்க்கலாமா..

தேவையான பொருட்கள்:

பால்

காபி தூள் - 3 டேபிள் ஸ்பூன்

சர்க்கரை - தேவைக்கேற்ப

செய்முறை:

முதலில் ஒரு பாத்திரத்தில் சுடு தண்ணீர் வைக்கவும். பிறகு, காபி ஃபில்டரின் மேல் பகுதியில் காபி பவுடரை சேர்க்கவும். அத்துடன் சுடு தண்ணீரை ஊற்றி மூடி வைக்கவும்.

மற்றொரு பாத்திரத்தில் பால் ஊற்றி காய்ச்சவும். ஒரு டம்ளரில் தேவையான அளவு சர்க்கரை போட்டு, அத்துடன் டீகாஷன் மற்றும் பால் சேர்த்து ஸ்பூன் வைத்து கலக்கினால் சுட சுட ஃபில்டர் காபி ரெடி..!

குறிப்பு: ஒரு முறை பயன்படுத்திய டிகாஷனை மேற்ப்படி கூறியதுபோல் இரண்டு அல்லது மூன்று முறை வரை பயன்படுத்தலாம்.

You'r reading பேஷ் பேஷ்.. சுவையான ஃபில்டர் காபி Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - கொலைகார ராமதாஸ் கும்பல்.... செம பல்டியோடு விருந்தில் பங்கேற்ற அமைச்சர் சிவி சண்முகம் - அதிருப்தியில் ஆதரவாளர்கள்!

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்