டேஸ்ட்டி ஃப்ரூட் கஸ்டர்ட் ரெசிபி

Tasty Fruit Custard Recipe

குழந்தைகள் விரும்பி சாப்பிடும் பழங்கள் கலந்த கஸ்டர்ட் ரெசிபி எப்படி செய்றதுன்னு இப்போ பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:

பால் - அரை லிட்டர்

கஸ்டர்ட் பவுடர் - 2 டேபிள் ஸ்பூன்

சர்க்கரை - 6 டேபிள் ஸ்பூன்

திராட்சை - அரை கப்

மாதுளை - அரை கப்

மாம்பழம் - அரை கப்

வாழைப்பழம் - அரை கப்

ஆப்பிள் - அரை கப்

செய்முறை:

ஒரு வாணலியை அடுப்பில் வைத்து பால் ஊற்றி காய்ச்சவும்.

பிறகு, ஒரு கப்பில் கஸ்டர்ட் பவுடர் 3 ஸ்பூன் பால் ஊற்றி நன்றாக கலக்கவும்.

பின்னர், நன்றாக காய்ந்த பாலில் கஸ்டர்ட் கலவையை ஊற்றி நன்றாக கலக்கவும்.

பால் கெட்டியாக மாறியதும், ஒரு பாத்திரத்தில் ஊற்றி ஆற வைக்கவும்.

கஸ்டர்ட் கலவை ஆறியதும் அதில் மேற்கொண்டு கூறிய பழத் துண்டுகளை சேர்த்து கிளறி சிறிது நேரம் பிரிட்ஜில் வைத்து எடுக்கவும்.

அவ்ளோதாங்க சுவையான ஃப்ரூட் கஸ்டர்ட் ரெடி..!

You'r reading டேஸ்ட்டி ஃப்ரூட் கஸ்டர்ட் ரெசிபி Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - பெரம்பலூர்தான் உங்களுக்கு... இல்லைன்னா 'இதயத்தில் இடம்’.. பாரிவேந்தருக்கு ஷாக் கொடுத்த திமுக!

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்