சுலபமா செய்யலாம் அரிசி பாயாசம் ரெசிபி

Tasty Rice Payasam Recipe

ருச்சி கார்னர் நேயர்களே.. இன்னைக்கு நாம் அரிசி பாயாசம் எப்படி செய்றதுன்னு இப்போ பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் :

உடைத்த பச்சரிசி - 100 கிராம்

வெல்லம் - 200 கிராம்

தேங்காய்ப்பால் - 1 கப்

நெய் - சிறிது

முந்திரி, கிஸ்மிஸ் - சிறிது

ஏலக்காய் தூள் - சிறிது

செய்முறை :

பச்சரிசியை நன்றாகக் கழுவி குக்கரில் போட்டு நன்றாக வேக வைக்கவும்.

பிறகு, வெந்த அரிசியுடன் வெல்லம் சேர்த்து, அது கரைந்ததும் ஏலக்காய்த் தூள் சேர்த்து நன்றாகக் கிளறவும்.

அத்துடன், நெய்யில் வறுத்த முந்திரி, கிஸ்மிஸ் போட்டுக் கடைசியில் தேங்காய்ப் பால் ஊற்றி கிளறவும்.

இந்த கலவை, ஒரு கொதி வந்ததும் இறக்கி சூடாகப் பரிமாறவும்.

அவ்ளோதாங்க.. சுவையான அரிசி பாயாசம் ரெடி.!

You'r reading சுலபமா செய்யலாம் அரிசி பாயாசம் ரெசிபி Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - `அரசியல்வாதிகள்தான் இதைச் செய்கின்றனர்' - புல்வாமா தாக்குதல் குறித்து சித்தார்த் மீண்டும் டுவீட்

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்