மொறு மொறுப்பான உருளைக்கிழங்கு வருவல் ரெசிபி

Crispy Potato fry recipe

தயிர் சாதத்திற்கு பக்கா சைட்டிஷ்னா அது உருளைக்கிழங்கு வருவல் தான்.. குழந்தைகள் விரும்பி சாப்பிடக்கூடிய உருளைக்கிழங்கு வருவல் எப்படி செய்றதுன்னு இப்போ பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:

உருளைக்கிழங்கு - 2

வெங்காயம் - பாதி

எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்

கடுகு - சிறிதளவு

பெருஞ்சீரகம் - 1 டீஸ்பூன்

மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை

மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்

உப்பு - தேவையான அளவு

கறிவேப்பிலை & சிறிதளவு

செய்முறை:

ஒரு பாத்திரத்தில், தோல் சீவி நீளமாக வெட்டி வைத்த உருளைக்கிழங்கை போடவும்.
அத்துடன், மஞ்சள் தூள், மிளகாய்த்தூள் சேர்த்து கிளறி வைக்கவும்.

ஒரு வாணலியில், எண்ணெய் ஊற்றி கடுகு, அரை டீஸ்பூன் பெருஞ்சீரகம் சேர்த்து பொரிந்ததும் உருளைக்கிழங்கை சேர்த்து நன்றாக கிளறி வேக விடவும்.

உருளைக்கிழங்கு பாதி வெந்ததும், நீளவாக்கில் வெட்டி வைத்த வெங்காயம், உப்பு சேர்த்து கிளறி நன்றாக வேக வைக்கவும்.

தண்ணீர் சேர்க்க வேண்டாம். உருளைக்கிழங்கு நன்றாக வெந்ததும் கறிவேப்பிலை, பெருஞ்சீரகம் சேர்த்து கிளறி இறக்கவும்.

அவ்ளோதாங்க.. சுவையான உருளைக்கிழங்கு வருவல் ரெடி..!

You'r reading மொறு மொறுப்பான உருளைக்கிழங்கு வருவல் ரெசிபி Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - 'கோதால குதிச்சமா கோப்பைய ஜெயிச்சமானு இருக்கணும்' - ஹிட் அடிக்கும் ஜிவி பிரகாஷின் குப்பத்து ராஜா டிரைலர்

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்